பொது செய்தி

தமிழ்நாடு

உறங்கா விழிகள், நம்மை காக்க! மாநகரில், 'இ-பீட்' ரோந்து முறை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருப்பூர்-திருப்பூரில், 'இ-பீட்' ரோந்து முறை, கூடுதல் நவீனத்துடன், மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ரோந்து போலீசாரின் செயல்பாடுகளை எளிதாக கண்காணிக்க முடிவதோடு, குற்றச்சம்பவங்களையும் எளிதாக தடுக்க முடியும்; குற்றவாளிகளையும் விரைவாக பிடிக்க வழி ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாநகர போலீசில், மகளிர் ஸ்டேஷன் - 2, போக்குவரத்து ஸ்டேஷன் -2 உட்பட மொத்தம் 12 ஸ்டேஷன்கள்

திருப்பூர்-திருப்பூரில், 'இ-பீட்' ரோந்து முறை, கூடுதல் நவீனத்துடன், மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ரோந்து போலீசாரின் செயல்பாடுகளை எளிதாக கண்காணிக்க முடிவதோடு, குற்றச்சம்பவங்களையும் எளிதாக தடுக்க முடியும்; குற்றவாளிகளையும் விரைவாக பிடிக்க வழி ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாநகர போலீசில், மகளிர் ஸ்டேஷன் - 2, போக்குவரத்து ஸ்டேஷன் -2 உட்பட மொத்தம் 12 ஸ்டேஷன்கள் உள்ளன. ஸ்டேஷன் எல்லை அடிப்படையில், 'பீட்' பிரிக்கப்பட்டு, போலீசார் ரோந்து செல்வது வழக்கம்.இதை கண்காணிக்க, 'இ-பீட்' முறை, கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. பின், அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட சில காரணங்களால், இது கடைபிடிக்கப்படவில்லை.தற்போது, இதில், பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது; மேலும், கூடுதல் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.ரோந்து செல்லும் போலீசார், ரோந்து சென்ற இடங்களை துல்லியமாக கண்காணிக்கும் விதமாக, புதிய 'இ-பீட்' ஆப் முறையை திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் வனிதா நேற்று அறிமுகம் செய்து வைத்தார். துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.629 முக்கியமான இடங்கள்போலீஸ் கமிஷனர் வனிதா கூறியதாவது:மாநகரில் உள்ள, எட்டு சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதிகள், 23 ரோந்து ஏரியாக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிய, ஒரு ரோந்து ஏரியாவுக்கு, தலா, இரண்டு போலீசார் விதம், 46 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், செயின், மொபைல் போன் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்கள் என, 629 முக்கியமான இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் 'க்யூஆர் கோடு' பொருத்தப்பட்டுள்ளது.'இ-பீட்' செயலி, கூகுள் ஜி.பி.எஸ்., உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ரோந்து போலீசார் எந்த இடத்தில் பணியில் உள்ளனர் என்பதை அறியமுடியும். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அருகில் உள்ள ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து, விரைவாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முடியும். 'இ-பீட்' செயலியில் சோதனைச்சாவடி, வாகன தணிக்கை செய்யும் இடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.ரோந்து போலீசார் 'க்யூஆர் கோடு'களை ஸ்கேன் செய்யும் போது, எந்தெந்த இடங்களுக்கு சென்றார், சென்ற நேரம், எத்தனை முறை ஆகியவை அறிந்து கொள்ள முடியும். மாநகரில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்களின் செயல்பாடுகள் செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். மாநகரில் உள்ள, 7, 862 'சிசிடிவி' கேமரா, இத்திட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்ட, 315 கேமரா மற்றும் தமிழக அரசால் புதிதாக, 1,265 கேமரா பொருத்தப்பட உள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படும் போது, குற்றத்தில் ஈடுபடும் நபர்களை விரைவில் கண்டறிய முடியும். குற்ற சம்பவங்கள் வெகுவாக குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X