பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற காடு வளர்ப்பு திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிதம்பரம்: சிதம்பரத்தில் நகர்ப்புற காடு வளர்க்கும் திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.சிதம்பரம் நகராட்சி, ஓமக்குளம் பகுதியில் நுண்ணுயிர் அகழ்வு முறையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று துவங்கியது. சிதம்பரம் நகராட்சி மற்றும் இ.எப்.ஐ., தொண்டு நிறுவனம் சார்பில், 2 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் துவங்கப்பட்டது. துவக்க விழாவிற்கு நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் தலைமை

சிதம்பரம்: சிதம்பரத்தில் நகர்ப்புற காடு வளர்க்கும் திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.

சிதம்பரம் நகராட்சி, ஓமக்குளம் பகுதியில் நுண்ணுயிர் அகழ்வு முறையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று துவங்கியது. சிதம்பரம் நகராட்சி மற்றும் இ.எப்.ஐ., தொண்டு நிறுவனம் சார்பில், 2 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் துவங்கப்பட்டது. துவக்க விழாவிற்கு நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் தலைமை தாங்கினார். பொறியாளர் மகராஜன் முன்னிலை வகித்தார்.கலெக்டர் பாலசுப்ரமணியம்,

சப் கலெக்டர் மதுபாலன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு நகர்ப்புற காடு வளர்ப்பு திட்டத்தை துவக்கி வைத்தனர். முதல் கட்டமாக 600 மரக்கன்றுகள் நடப்பட்டது. அதன் வளர்ச்சி குறித்த ஆய்வுக்கு பின், மேலும் 1,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. நிகழ்வில் இளநிலை பொறியாளர் செந்தில்குமார், இ.எப்.ஐ.,தொண்டு நிறுவன நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X