ரோட்டில் 'வித்தை' பழகுங்க! 'மலை' ஏறலாம்... தடுமாறலாம்!

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருப்பூர்-திருப்பூர் மாநகராட்சி, 9வது வார்டில் புதிய கான்கிரீட் தளம், தார் ரோடு அமைக்க திட்டமிட்டு பணிகள் நடக்கிறது. இதில் புகழும் பெருமாள்புரம் பகுதியில் 1 முதல் 3 வீதி வரை கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேரிபாளையம் ரோட்டில் இருந்து பி.என்., ரோடு சாந்தி தியேட்டர் பகுதியை அடையும் வகையில் இந்த ரோடு உள்ளது.இதில் முதல் மற்றும் 3வது வீதியில் அமைத்துள்ள தளத்தை
 ரோட்டில் 'வித்தை' பழகுங்க! 'மலை' ஏறலாம்... தடுமாறலாம்!

திருப்பூர்-திருப்பூர் மாநகராட்சி, 9வது வார்டில் புதிய கான்கிரீட் தளம், தார் ரோடு அமைக்க திட்டமிட்டு பணிகள் நடக்கிறது. இதில் புகழும் பெருமாள்புரம் பகுதியில் 1 முதல் 3 வீதி வரை கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேரிபாளையம் ரோட்டில் இருந்து பி.என்., ரோடு சாந்தி தியேட்டர் பகுதியை அடையும் வகையில் இந்த ரோடு உள்ளது.இதில் முதல் மற்றும் 3வது வீதியில் அமைத்துள்ள தளத்தை காட்டிலும், 2 வது வீதியில் உள்ள தளம் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிழமேல் ரோட்டிலிருந்து தென் வடல் ரோட்டில் செல்ல வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில், ''மற்ற இரு ரோடுகளை விட, 2வது வீதி 35 செ.மீ., அளவு உயரம் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஆழம் குறைவு என்பதால் தளம் சற்று உயர்த்தப்பட்டது. இது கான்கிரீட் தளம் என்பதால் இத்துடன் இணையும் தென் வடல் ரோட்டில், சாய்தளமாக சற்றுநீளமாக தார் ரோடு அமைக்கப்படும். வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்ல முடியும். ஒரு சில நாட்களில் தார் ரோடு பணி துவங்கப்படும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X