சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கடலுார்: ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி, கடலுாரில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு சி.ஐ.டி.யூ., சார்பில், 1998 முதல் மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முத்தரப்பு ஒப்பந்தப்படி ரூ. 380 கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல

கடலுார்: ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி, கடலுாரில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு சி.ஐ.டி.யூ., சார்பில், 1998 முதல் மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முத்தரப்பு ஒப்பந்தப்படி ரூ. 380 கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் கேப்பர்மலை மின்வாரிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் பழனிவேல், மாவட்ட செயலளர் தேசிங்கு, கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினர். கோட்ட செயலாளர்கள் பன்னீ்ர்செல்வம், ஆறுமுகம், ராஜகோபால், தனுசு, தமிழ்வாணன், ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X