பொது செய்தி

தமிழ்நாடு

விலை வீழ்ச்சியா? இருப்பு வையுங்கள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருப்பூர்-கலெக்டர் வினீத் அறிக்கை:உடுமலை, பெதப்பம்பட்டி, திருப்பூர், வெள்ளகோவிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்காசோளம், சோளம், தேங்காய் பருப்பு ஆகியவற்றை தரம் பிரித்து விற்பனை செய்ய, தரம் பிரிப்புக்கான இயந்திரம் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. விவசாயிகள், விளைபொருட்களை இருப்பு வைக்கும் வகையில், 59 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.விலை

திருப்பூர்-கலெக்டர் வினீத் அறிக்கை:உடுமலை, பெதப்பம்பட்டி, திருப்பூர், வெள்ளகோவிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்காசோளம், சோளம், தேங்காய் பருப்பு ஆகியவற்றை தரம் பிரித்து விற்பனை செய்ய, தரம் பிரிப்புக்கான இயந்திரம் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. விவசாயிகள், விளைபொருட்களை இருப்பு வைக்கும் வகையில், 59 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.விலை வீழ்ச்சி காலங்களில் விற்பனையை தவிர்ப்பதற்காக விவசாயிகளுக்கு மூன்று லட்சம், வியாபாரிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பொருளீட்டு கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.பூ, காய்கறி, பழங்களை குறைந்த வாடகைக்கு இருப்பு வைத்து, பின்னர் விற்று கொள்ளும் வகையில், பொங்கலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 50 மெட்ரிக் டன் மற்றும் பல்லடம், அவிநாசி, உடுமலை, வெள்ளகோவில் ஆகிய நான்கு விற்பனை கூடங்களில் தலா, 25 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு உள்ளது. இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ள, தொடர்புக்கு: 94879 05734, 95661 69829.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X