பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழிலாளர்களுக்கு மூன்று நாள் தடுப்பூசி முகாம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இம்முகாமை, வரும் 21ம் தேதி விருத்தாசலம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமை, வரும் 21ம் தேதி விருத்தாசலம் விருதாம்பிகை ஐ.டி.ஐ., வளாகத்தில், அமைச்சர் கணேசன் மாலை 4 மணிக்கு துவக்கி வைக்கிறார். 23ம் தேதி விருத்தாசலம் ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி, மேல்புவனகிரி பங்களா பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கும், சிதம்பரம் மேலவீதி பெல்காம் அன்னம்மாள் சத்திரத்தில் பகல் 2 மணிக்கும் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

24ம் தேதி காட்டுமன்னார்கோவில் வி.பி.எஸ்., ராஜலட்சுமி மகால், பருவதராஜ குருகுல மேல்நிலைப்பள்ளி எதிரில் காலை 8 மணிக்கும், ஸ்ரீமுஷ்ணம் ஜெ.பி., கல்வியியல் கல்லுாரியில் பகல் 2 மணிக்கும், 25ம் தேதி கடலுார் செம்மண்டலம் தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் காலை 8 மணி, குறிஞ்சிப்பாடி ச.கு., வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் பகல் 2 மணிக்கும் முகாம் நடக்கிறது.கட்டுமான தொழிலாளர்கள் தங்களது நலவாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண்ணுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X