பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் சென்று ஆய்வு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கடலுார்: மீன்பிடி சட்ட விதிகளை மீனவர்கள் கடைபிடிக்கிறார்களா என, மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் சென்று ஆய்வு செய்தனர்.கடல் பகுதியில் கரையிலிருந்து ஐந்து கடல் மைல்களுக்குள் இயந்திர மீன்பிடி விசைப்படகை கொண்டு மீன்பிடிக்க கூடாது. கரையோரம் ஆழ்கடல் மீன்பிடி படகை பயன்படுத்துதல், 40 மி.மீ.,க்கு குறைவான கண்ணியளவு கொண்ட இழுவலைகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.கடலுார்

கடலுார்: மீன்பிடி சட்ட விதிகளை மீனவர்கள் கடைபிடிக்கிறார்களா என, மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் சென்று ஆய்வு செய்தனர்.கடல் பகுதியில் கரையிலிருந்து ஐந்து கடல் மைல்களுக்குள் இயந்திர மீன்பிடி விசைப்படகை கொண்டு மீன்பிடிக்க கூடாது.

கரையோரம் ஆழ்கடல் மீன்பிடி படகை பயன்படுத்துதல், 40 மி.மீ.,க்கு குறைவான கண்ணியளவு கொண்ட இழுவலைகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் இச்சட்டத்தை அமல்படுத்தும் விதமாக கடந்த மாதம் முதல் கடலுார் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் ரோந்து செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று கடலுார் கடலோர காவல்படை போலீசாருடன், மீன்வளத்துறை ஆய்வாளர் மணிகண்டன், மேற்பார்வையாளர் அறிவேந்தன், கடல் சட்ட அமலாக்கப்பிரிவு காவலர் அய்யப்பன் உள்ளிட்டோர், கடலோர காவல் குழும படகில், கடலில் ரோந்து சென்றனர்.அப்போது, கடல் மீன்பிடி விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என, ஆய்வு செய்தனர். ஆய்வில், மீன்பிடி சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X