பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வடலுார்: குறிஞ்சிப்பாடி வேளாண் சார்பில் ஆயிக்குப்பம் கிராமத்தில் பண்ணை கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது.கடலுார் வேளாண்மை துணை இயக்குனர் கென்னடிஜெயக்குமார் தலைமை தாங்கி, தென்னை நார் கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் பூவராகன் தென்னந்தோப்பில் கிடைக்கக் கூடிய காய்ந்த மட்டைகள்,
 விவசாயிகளுக்கு பயிற்சி

வடலுார்: குறிஞ்சிப்பாடி வேளாண் சார்பில் ஆயிக்குப்பம் கிராமத்தில் பண்ணை கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது.கடலுார் வேளாண்மை துணை இயக்குனர் கென்னடிஜெயக்குமார் தலைமை தாங்கி, தென்னை நார் கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.

குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் பூவராகன் தென்னந்தோப்பில் கிடைக்கக் கூடிய காய்ந்த மட்டைகள், பாலைகள், குரும்பைகளை பொடியாக்கி உரமாக பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி வேளாண் அலுவலர் அனுசுயா ஆகியோர் பயிற்சி அளித்தனர். உதவி வேளாண் அலுவலர் சிவக்குமார், ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியாராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X