எங்கேயும்... எப்போதும் ஓடலாம் சுதந்திர ஓட்டம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எங்கேயும்... எப்போதும் ஓடலாம் சுதந்திர ஓட்டம்!

Added : ஆக 19, 2021
Share
கோவை-கோவையில் ஆரோக்கிய சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சி, வரும் 21ல் நடக்கிறது.சுதந்திர தினத்தின் 75ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டில் 744 இடங்களில் ஆரோக்கிய சுதந்திர ஓட்டத்துக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கே, எப்போது ஓட வேண்டும் என்பதை பங்கேற்பாளரே முடிவு செய்யலாம்.ஓடும் பாதையையும் அவரவரே தேர்வு செய்து, வசதியான நேரத்தில் ஓடலாம் என்பது தான், இந்நிகழ்ச்சியின் சிறப்பு.

கோவை-கோவையில் ஆரோக்கிய சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சி, வரும் 21ல் நடக்கிறது.சுதந்திர தினத்தின் 75ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டில் 744 இடங்களில் ஆரோக்கிய சுதந்திர ஓட்டத்துக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கே, எப்போது ஓட வேண்டும் என்பதை பங்கேற்பாளரே முடிவு செய்யலாம்.ஓடும் பாதையையும் அவரவரே தேர்வு செய்து, வசதியான நேரத்தில் ஓடலாம் என்பது தான், இந்நிகழ்ச்சியின் சிறப்பு. கோவை மாவட்டத்தில் வரும் 21ல் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம், மத்திய அரசின் கள விளம்பரத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. சுதந்திர ஓட்டத்தை, கோவை கலெக்டர் மற்றும் பாரதியார் பல்கலை துணைவேந்தர் தொடங்கி வைக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X