பொது செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெண் தற்கொலைபுதுச்சத்திரம்: சிலம்பிமங்களத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி சுலோச்சனா, 51; இவர், தீராத வயிற்று வலி காரணமாக கடந்த 16ம் தேதி எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.மணல் திருட்டு: மூவர் கைது

பெண் தற்கொலைபுதுச்சத்திரம்: சிலம்பிமங்களத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி சுலோச்சனா, 51; இவர், தீராத வயிற்று வலி காரணமாக கடந்த 16ம் தேதி எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.மணல் திருட்டு: மூவர் கைது குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். எடங்கொண்டான்பட்டு ஏரியில் ராமநாதன்குப்பம் ஆனந்தவேலு, 31, தங்களிகுப்பம் மச்சரேகை, 51, வெங்கட்டம்மாள்புரம் வடிவேலு, 37, ஆகியோர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளினர். அவர்களை கைது செய்த போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.வாகனம் மோதி மூதாட்டி பலிவேப்பூர்: கொளப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ஜெனரேட்டர் திருடிய 2 பேர் கைது நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 18ல் உள்ள ஜியோ டவரில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஜெனரேட்டர் கடந்த 29ம் தேதி திருடு போனது. நிறுவன மேலாளர் ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது வழக்குப் பதிந்து விசாரித்தார்.

ஆவடியை சேர்ந்த ஜோசப் ராஜ்குமார், 45; விழுப்புரம் அடுத்த வரக்கூர் கர்ணன், 27, ஆகியோர் ஜெனரேட்டரை திருடியது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஜெனரேட்டரை பறிமுதல் செய்தனர்.வாலிபர் மர்ம சாவுநெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2ல் உள்ள மாற்றுக்குடியிருப்யை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வைத்தியலிங்கம், 32; பெயின்டர். இவர், நேற்று இரவு வட்டம் 2 அருகே உள்ள சாலையோர மரத்தில் துாக்கில் சடலமாக தொங்கினார். டவுன்ஷிப் போலீசார் சடலத்தை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

விபத்தில் முதியவர் சாவு திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து,70. இவர் நேற்று அதிகாலை வெங்கனுார் பஸ் நிறுத்தம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். திருச்சி நோக்கிச்சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அதே இடத்தில் இறந்தார். ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர் கைதுகடலுார்: கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையில் போலீசார் வேப்பூர்-சேலம் சாலை, காஞ்சிராங்குளம் பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த மினி வேனை (டி.என்.91-ஏ.2435) நிறுத்தியபோது, டிரைவர் தப்பியோடினார். வேனில் இருந்த மற்றொருவரை போலீசார் மடக்கி, சோதனை செய்ததில், வேனில் 42 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. விசாரணையில், சிக்கியவர் திட்டக்குடி, வைத்தியநாதபுரம் ரவிச்சந்திரன், 40; என்பதும், வேப்பூர் பகுதி மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, கோழி தீவனத்திற்காக சேலத்திற்கு கடத்தியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய வைத்தியநாதபுரம் சிலம்பரசனை தேடி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர் கைதுசிதம்பரம்: சீர்காழி பழையாறு பகுதியை சேர்ந்தவர் ரேவதி, 40. இவரது மருமகள் பிரதீபா, 24; இருவரும் பிச்சாவரத்தில் இருந்து சிதம்பரத்திற்கு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோ டிரைவர் பரங்கிப்பேட்டை, சலங்கைக்கார தெருவை சேர்ந்த சரவணன், கூடுதல் கட்டணம் கேட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ரேவதி ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினார். பிரதீபா இறங்க முயன்றபோது, சரவணன் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றார். இதனால், கூச்சலிட்ட பிரதீபாவை சரவணன் கீழே தள்ளி விட்டதில், காயமடைந்தார். அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, சரவணனை, 44; கைது செய்தனர். கார் மோதி ஒருவர் சாவுநெய்வேலி: நெய்வேலி, இந்திரா நகர், மாற்றுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி, 55. இவர் நேற்று இரவு 8 மணியளவில் ஆர்ச்கேட் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். டவுன்ஷிப் வட்டம் 2 அருகே எதிரே வந்த இனோவா கார் மோதி இறந்தார். டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X