பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்ட பள்ளிகள் கேட்டு உத்தரவு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை-தற்காலிக அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் பட்டியல் அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு, உரிமம் புதுப்பித்தல் நடைமுறை தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மூலம், உரிய கோப்புகளை இணையதளத்தில் பதிவேற்றி, ஆய்வு மேற்கொண்டு, உரிமச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.கொரோனா தொற்று

கோவை-தற்காலிக அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் பட்டியல் அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு, உரிமம் புதுப்பித்தல் நடைமுறை தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மூலம், உரிய கோப்புகளை இணையதளத்தில் பதிவேற்றி, ஆய்வு மேற்கொண்டு, உரிமச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு முதல், ஆய்வு மேற்கொள்ளாமல், தற்காலிக அங்கீகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. நடப்பாண்டிலும் இந்நடைமுறையே பின்பற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுசார்ந்த தகவல்களை திரட்டும் வகையில், தனியார் பள்ளிகளின் விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, மாவட்டத்தில் மொத்தமுள்ள தனியார் பள்ளிகள் எண்ணிக்கை, தற்காலிக அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் குறித்த தகவல்கள், மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு கொண்ட பள்ளிகள் குறித்த பட்டியல் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X