பொது செய்தி

தமிழ்நாடு

குறிச்சி குள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை-குறிச்சி குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டும் பணியை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்டனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், குறிச்சி குளத்தில் பணிகள் நடந்து வருகின்றன. குளக்கரையை ஆக்கிரமித்து, 540 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.அதில் வசிப்பவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கப்பட்டு விட்டது.

கோவை-குறிச்சி குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டும் பணியை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்டனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், குறிச்சி குளத்தில் பணிகள் நடந்து வருகின்றன. குளக்கரையை ஆக்கிரமித்து, 540 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.அதில் வசிப்பவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கப்பட்டு விட்டது. சிலர் வீட்டை காலி செய்து விட்டனர்; பலர் காலி செய்யாமல் இருக்கின்றனர்.காந்தி நகரில், 25 வீடுகள், திருவள்ளுவர் நகரில், 180 வீடுகள் இன்னும் காலி செய்யப்படாமல் இருந்தன. நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா ஆகியோர் தலைமையில், நகரமைப்பு பிரிவினர் நேற்று வீடு வீடாகச் சென்று, எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்தனர். சிலரது வீட்டு சுவர் மற்றும் கதவுகளில், நோட்டீஸ் ஒட்டினர்.குறிப்பிட்ட அவகாசத்துக்குள் வீட்டை காலி செய்து, மாற்று வீடுகளுக்கு இடம் பெயர வேண்டும் என, மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X