பொது செய்தி

தமிழ்நாடு

கைதிகளை உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி 

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை-சிறையில் கொரோனா காரணமாக, உறவினர்கள் கைதிகளை சந்திக்க தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சிறை கைதிகளுக்கு கொரோனா பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளை உறவினர்கள் நேரில் சந்திக்க, கடந்த ஏப்., 27ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு பதிலாக, வழக்கமான போன் அழைப்புகளுடன், 'வீடியோ' கால் மூலம் கைதிகள் உறவினர்களுடன்

கோவை-சிறையில் கொரோனா காரணமாக, உறவினர்கள் கைதிகளை சந்திக்க தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சிறை கைதிகளுக்கு கொரோனா பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளை உறவினர்கள் நேரில் சந்திக்க, கடந்த ஏப்., 27ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு பதிலாக, வழக்கமான போன் அழைப்புகளுடன், 'வீடியோ' கால் மூலம் கைதிகள் உறவினர்களுடன் பேசிக்கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இச்சூழலில், நேற்று முன்தினம் முதல், சிறையில் கைதிகளை அவர்களின் உறவினர்கள், நேரில் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை, அவர்களின் உறவினர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பார்த்து பேசி வருகின்றனர்.சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு கைதிக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நேர்காணல் அனுமதிக்கப்படும். சந்திக்க விரும்பும் உறவினர்கள், இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்ட சான்றிதழ், 72 மணி நேரத்துக்குள் பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை, 15 நிமிடங்கள் உறவினர்கள் கைதிகளை சந்திக்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X