பொது செய்தி

தமிழ்நாடு

இழப்பீட்டு நிலுவை வழங்காததால் நலத்துறையில் ஜப்தி நடவடிக்கை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
விழுப்புரம்: ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்காததால், கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த கெடார் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி, 55; இவருக்கு, சொந்தமாக ஐந்தரை ஏக்கர் இடம் இருந்தது. அந்த இடம் 1999ல் ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
 இழப்பீட்டு நிலுவை வழங்காததால் நலத்துறையில் ஜப்தி நடவடிக்கை   விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம்: ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்காததால், கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அடுத்த கெடார் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி, 55; இவருக்கு, சொந்தமாக ஐந்தரை ஏக்கர் இடம் இருந்தது. அந்த இடம் 1999ல் ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டது

.இதற்காக, அவருக்கு இழப்பீட்டுத் தொகை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 518 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.இந்த தொகை போதாது எனவும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பத்மாவதி, விழுப்புரம் முதன்மைச் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அதன் பேரில், 2006 மார்ச் 13ல் பத்மாவதிக்கு இழப்பீட்டுத் தொகையாக 24 லட்சத்து 88 ஆயிரத்து 277 ரூபாய் மற்றும் வட்டியுடன் சேர்த்து 48 லட்சம் ரூபாய் ஆதிதிராவிடர் நலத்துறை வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, பத்மாவதிக்கு 37 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.மீதமுள்ள 11 லட்சம் ரூபாயை வழங்காமல், ஆதிதிராவிடர் நலத் துறை காலம் தாழ்த்தி வந்தது. இதையொட்டி, மனுதாரர் தரப்பில் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், பத்மாவதிக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 11 லட்சம் ரூபாயை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும். தவறினால் அந்த தொகைக்குரிய அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நேரிடும் என கடந்த 13ம் தேதி உத்தரவிட்டார்.தீர்ப்பு வழங்கியும், இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.

கோர்ட் உத்தரவின் பேரில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய, வழக்கறிஞர் தரணிவேந்தன், குமாஸ்தா ஜோசப், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் சுந்தரமூர்த்தி, மனுதாரர் பத்மாவதி ஆகியோர் நேற்று காலை 11:00 மணிக்கு வந்தனர்.அவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் பேச்சு நடத்தினார். அதில், 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.அதற்குள் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்களோடு பேசி இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதன்பேரில், தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டனர். இச்சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X