பொது செய்தி

தமிழ்நாடு

விருது வாங்கலையோ விருது ! அழைக்கிறது தமிழ் வளர்ச்சித்துறை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை,-தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், துாய தமிழ் ஊடக விருது, நற்றமிழ் பாவலர் விருது, துாய தமிழ் பற்றாளர் விருது, தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த விருதுகள், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை கொண்டவை. விருது பெற விரும்புவோர், சான்றுகளை இணைத்து, ஆக.,31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை,

கோவை,-தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், துாய தமிழ் ஊடக விருது, நற்றமிழ் பாவலர் விருது, துாய தமிழ் பற்றாளர் விருது, தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த விருதுகள், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை கொண்டவை. விருது பெற விரும்புவோர், சான்றுகளை இணைத்து, ஆக.,31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை, சொற்குவை.காம் (sorkuvai.com) தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.நற்றமிழ் பாவலர் விருது, துாய தமிழ் சொற்களால் கவிதை புனையும் படைப்பாளர்களை ஊக்குவிக்க வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.நடைமுறை வாழ்க்கையிலும், துாய தமிழையே பயன்படுத்தும் தனித்தமிழ் பற்றாளர்கள் மூவருக்கு, துாய தமிழ் பற்றாளர் விருது வழங்கப்பட உள்ளது.அகராதியியல் அறிஞருக்கு, தேவநேயப் பாவாணர் விருதும், தமிழை தாய்மொழியாக கொள்ளாத, சிறந்த தமிழ் படைப்புகளை வெளியிட்டுள்ள, தகுதி வாய்ந்தவருக்கு வீரமா முனிவர் விருதும், வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு, ஒரு பவுன் தங்கப்பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் உண்டு.விண்ணப்பங்களை, 'இயக்குனர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம் எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி., நகர், சென்னை 600 028' என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X