சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இம்மாதம் மட்டும் 49 பேர் கொரோனாவால் மரணம் 

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை-கோவை மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும் மொத்தம், 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.கொரோனா மூன்றாம் அலை, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என, சுகாதார துறை சார்பில் கூறப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 200க்கும் அதிகமாகவே இருந்து

கோவை-கோவை மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும் மொத்தம், 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.கொரோனா மூன்றாம் அலை, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என, சுகாதார துறை சார்பில் கூறப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 200க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.மாநில சுகாதார துறை வெளியிட்டு வரும் அறிக்கையின்படி, இம்மாதத்தில் மட்டும், 3,859 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.3,416 பேர் பூரண குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், தினமும் மூன்று முதல் 5 பேர் சிகிச்சை பலனின்றி, இறந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 18 நாட்களில் மட்டும் மொத்தம், 49 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X