சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் மர்ம சாவு உறவினர்கள் மறியல்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்மமான முறையில் இறந்த வாலிபர் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுார் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 65. இவரது மகன் குணாராஜ், 32; கூலி தொழிலாளி, திருமணம் ஆகாதவர். இவர் பக்கத்தில் உள்ள அமலநாதன் என்பவர் வீட்டில் யாரும் இல்லை என்பதால், அங்கு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்மமான முறையில் இறந்த வாலிபர் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுார் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 65. இவரது மகன் குணாராஜ், 32; கூலி தொழிலாளி, திருமணம் ஆகாதவர். இவர் பக்கத்தில் உள்ள அமலநாதன் என்பவர் வீட்டில் யாரும் இல்லை என்பதால், அங்கு இரவில் துாங்குவது வழக்கம்.கடந்த 8ம் தேதி இரவு அங்கு துாங்க சென்றார். இரவு 11 மணிக்கு குணாராஜ் அலறல் சத்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, தலையின் பின்பக்கம் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி 16ம் தேதி இரவு இறந்தார்.நேற்று முன்தினம் இரவு குணாராஜ் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனிடையே போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதையறிந்த உறவினர்கள், கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி நேற்று பகல் 11 மணிக்கு சிதம்பரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., சுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், மணிவண்ணன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பிரேத பரிசோதனை அறிக்கை விபரம் கிடைத்த பின், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதை ஏற்று, 11.20 மணிக்கு மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X