குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Added : ஆக 19, 2021
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வடகரைதாழனுாரைச் சேர்ந்தவர் காமராஜ், 46; இவர், கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை அடுத்த மேலந்தல் கிராமத்தில் நடந்த திருட்டு வழக்கில், கைது செய்யப்பட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வடகரைதாழனுாரைச் சேர்ந்தவர் காமராஜ், 46; இவர், கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை அடுத்த மேலந்தல் கிராமத்தில் நடந்த திருட்டு வழக்கில், கைது செய்யப்பட்டு வேடம்பாக்கம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரது செயலைத் தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில் காமராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.அதன்பேரில், வேடம்பாக்கம் சிறையில் இருந்த காமராஜிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டு, கடலுார் மத்திய சிறைக்கு காமராஜ் மாற்றப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X