பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் 'டிமிக்கி'; 'போட்டுடைத்தார்' மாநகராட்சி கமிஷனர்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை-கோவை மாநகராட்சியில், சம்பளம் கேட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, சம்பள கேட்பு பட்டியல் தயாரித்து சமர்ப்பிக்க, மண்டல உதவி கமிஷனர்களுக்கு, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சியில், துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி லாரி டிரைவர்கள், கிளீனர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், கிளார்க்குகள், இரவு காவலர்கள் என, பல்வேறு

கோவை-கோவை மாநகராட்சியில், சம்பளம் கேட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, சம்பள கேட்பு பட்டியல் தயாரித்து சமர்ப்பிக்க, மண்டல உதவி கமிஷனர்களுக்கு, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில், துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி லாரி டிரைவர்கள், கிளீனர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், கிளார்க்குகள், இரவு காவலர்கள் என, பல்வேறு பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு இரு மாதங்களாக, சம்பளம் வழங்குவது தாமதமாகி வருகிறது.கடந்த ஜூலை மாத சம்பளம் வழங்காததை கண்டித்து, சுதந்திர தினத்தன்று, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்த துாய்மை பணியாளர்கள், கைது செய்யப்பட்டனர்.வடக்கு மண்டலம், 44வது வார்டில் பணிபுரியும், 40 துாய்மை தொழிலாளர்கள், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுகாதார ஆய்வாளர் ஜாகீர் உசேன் பேச்சு நடத்தினார். அப்போது, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின், சம்பள கேட்பு பட்டியலை விரைந்து சமர்ப்பிக்க, கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.மாத சம்பளம் தாமதமாவது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டதற்கு, ''ஒப்பந்த அடிப்படையில், 3,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

மாநகராட்சியுடன், 22 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு, மூன்று மாதத்துக்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்யப்படும் என்பது ஒப்பந்த விதிமுறை. சம்பள கேட்பு பட்டியல் சமர்ப்பித்து, பணம் பெற வேண்டும். சில தருணங்களில், நிதியின்றி, நிலுவையாகி விடும். ஒப்பந்த நிறுவனத்துக்கு பணம் கொடுத்து விடுகிறோம்; தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் இருக்கின்றனர்.சில நிறுவனங்களின் ஒப்பந்தம், சில மாதங்களில் முடிகிறது. காலநீட்டிப்பு செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் முடியப்போகிறது. இனி, குப்பை பிரச்னைக்கு எந்த வகையில் தீர்வு காண்பது என யோசித்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X