சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் வாங்கி தருவதாக மோசடி; இருவர் கைது

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை-கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 48. இவர் தனது நண்பர் அர்ஜுனன் என்பவருடன் இணைந்து, கேபிள் டி.வி., இணைப்பு வழங்கி வருகிறார். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டவருக்கு, பணம் தேவைப்பட்டது.இதற்காக முயற்சி செய்தபோது, சென்னையை சேர்ந்த குமாரி என்பவர் மூலம் புதுக்கோட்டை, ஆலங்குடி,

கோவை-கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 48. இவர் தனது நண்பர் அர்ஜுனன் என்பவருடன் இணைந்து, கேபிள் டி.வி., இணைப்பு வழங்கி வருகிறார். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டவருக்கு, பணம் தேவைப்பட்டது.இதற்காக முயற்சி செய்தபோது, சென்னையை சேர்ந்த குமாரி என்பவர் மூலம் புதுக்கோட்டை, ஆலங்குடி, பாச்சிகோட்டை ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் அறிமுகமானார்.தனக்கு கடன் பெற்று தரும்படி, பன்னீர்செல்வம், அவரது நண்பரான திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தும் செல்வகுமார் ஆகியோரை, கடந்த ஜன., மாதம் ராஜா அணுகினார்.அப்போது தேவையான கடன் பெற்று தருவதாகவும், இதற்கு ஆவண சரிபார்ப்பு செலவாக, 22.5 லட்சம் ரூபாய் முதலில் வேண்டும் என்றும் கேட்டார்.பின், கடன் கிடைத்ததும், கமிஷன் தொகை, ரூ.15 லட்சம் வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜா, கடந்த ஜன., மாதம், 12ம் தேதி கோவை வந்த பன்னீர்செல்வம் மற்றும் செல்வகுமாரிடம், 22.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.நிரப்பப்படாத காசோலைகள் உள்ளிட்டவையும் வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும், சில நாட்களில் கடன் பெற்றுத்தரப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், கடன் பெற்றுத் தரவில்லை. கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில், ராஜா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கிடையே, கோவையில் டாக்டர் ஒருவருக்கு கடன் வாங்கித்தருவதாக கூறி, பண மோசடி செய்த வழக்கில், ஏற்கனவே ஊராட்சிமன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் செல்வகுமார் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தற்போது இந்த வழக்கில் சிறையில் உள்ள பன்னீர்செல்வம், செல்வ குமார் ஆகியோரை கைது செய்வதற்கான ஆணையை வழங்கினர்.விரைவில், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து, விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். தலைமறைவான குமாரி என்பவரை, போலீஸார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X