சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இருவர் கைது

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை--கோவை, கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் பேஸ்புக்கில் வேலை தேடி உள்ளார். அப்போது, சபரிநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின், கருணாகரனிடம், தான் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் எனவும், சபரிநாதன் கூறியுள்ளார்.ஆசை வார்த்தைக்கு மயங்கிய கருணாகரன், சபரிநாதனின் வங்கி கணக்குக்கு, சிறிது சிறிதாக, 7.55 லட்சம் ரூபாய் செலுத்தி

கோவை--கோவை, கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் பேஸ்புக்கில் வேலை தேடி உள்ளார். அப்போது, சபரிநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின், கருணாகரனிடம், தான் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் எனவும், சபரிநாதன் கூறியுள்ளார்.ஆசை வார்த்தைக்கு மயங்கிய கருணாகரன், சபரிநாதனின் வங்கி கணக்குக்கு, சிறிது சிறிதாக, 7.55 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.அதன் பின்னும், 3 லட்சம் செலுத்த வேண்டுமென சபரிநாதன் கூறியுள்ளார். பணத்தை செலுத்தவில்லை என்றால், தாங்கள் பேசிய ஆடியோவை கருணாகரனின் மனைவியிடம் காட்டுவேன் என, சபரிநாதன் மிரட்டியுள்ளார்.கருணாகரன், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆத்தூரை சேர்ந்த சபரிநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கலியமூர்த்தியையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2.24 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.'வேலை தேடுவது என்றால், உரிய இணையதளத்தை பயன்படுத்தவும். தவறாக பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம். இது போன்ற குற்றங்களை, 94981 81212 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்' என, எஸ்.பி., செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X