ஆற்றில் கலக்கும் கழிவுகள்; அபராதம் விதிக்க உத்தரவு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
குன்னுார்- -குன்னுார் சிற்றாறுகளில் கழிவுகள் கலந்து வருவதற்கு அபராதம் விதிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டார்.குன்னுார் மலை பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், பஸ் ஸ்டாண்ட், லாஸ் பால்ஸ் வழியாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றை கலக்கிறது. குன்னுாரில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் கழிவுகள் ஆற்றில் கலந்து, நீர் அசுத்தமாகிறது.இந்த நீரையே வனவிலங்குகளும், மக்களும்
 ஆற்றில் கலக்கும் கழிவுகள்; அபராதம் விதிக்க உத்தரவு

குன்னுார்- -குன்னுார் சிற்றாறுகளில் கழிவுகள் கலந்து வருவதற்கு அபராதம் விதிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டார்.

குன்னுார் மலை பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், பஸ் ஸ்டாண்ட், லாஸ் பால்ஸ் வழியாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றை கலக்கிறது. குன்னுாரில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் கழிவுகள் ஆற்றில் கலந்து, நீர் அசுத்தமாகிறது.இந்த நீரையே வனவிலங்குகளும், மக்களும் பயன்படுத்துவதால் நோய் பரவும் சூழல் உள்ளது. தீர்வு காண, குன்னுார் நகராட்சியின் பரவலாக்க கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய மற்றும் நகராட்சி அதிகாரிகள், வனத்துறையினர், ஆற்றோர பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, 'கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கையை உடனே மேற்கொள்ளவும், ஆற்றில் கழிவுகளை கலக்கவிடும் வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,' என, உத்தரவிட்டார். மாசு அளவு அறிய, மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டது.கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கூறுகையில்,''குன்னுார் ஆற்றில் கழிவுகளை கலக்கவிடுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X