சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலுவை சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் சாலை மறியல்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கூடலுார்- -கூடலுார் அருகே, தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள், நிலுவை சம்பளம் கேட்டு, எஸ்டேட் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் 'சில்வர் கிளவுட்' அருகே உள்ள, தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆறு மாதமும்; தற்காலிக தொழிலாளர்களு மூன்று மாதமும் சம்பளம் வழங்கவில்லை.இந்நிலையில், சம்பளம் வழங்க கோரி, தொழிலாளர்கள், எஸ்டேட் சாலையில், காலை,

கூடலுார்- -கூடலுார் அருகே, தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள், நிலுவை சம்பளம் கேட்டு, எஸ்டேட் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் 'சில்வர் கிளவுட்' அருகே உள்ள, தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆறு மாதமும்; தற்காலிக தொழிலாளர்களு மூன்று மாதமும் சம்பளம் வழங்கவில்லை.இந்நிலையில், சம்பளம் வழங்க கோரி, தொழிலாளர்கள், எஸ்டேட் சாலையில், காலை, 9:30 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கூடலுார் தாசில்தார் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் அருள் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.அதில், 'நிரந்தர தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளமும்; தற்காலிக தொழிலாளர்களுக்கு ஒரு வார சம்பளத்தை முதல் கட்டமாக வழங்கப்படும்,' என, நிர்வாகம் தெரிவித்தது. அதனை ஏற்று பிற்பகல், 2:30 மணிக்கு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X