சில வரி செய்திகள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
குளத்தில் மூழ்கி மாற்றுத்திறனாளி பலிசெங்குன்றம்: அழிஞ்சிவாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், 23; மாற்றுத்திறனாளி. இவரது உடல், நேற்று காலை 8:00 மணி அளவில் அங்குள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் மிதப்பதாக, செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சென்று உடலை மீட்டனர். அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து,

குளத்தில் மூழ்கி மாற்றுத்திறனாளி பலி
செங்குன்றம்: அழிஞ்சிவாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், 23; மாற்றுத்திறனாளி. இவரது உடல், நேற்று காலை 8:00 மணி அளவில் அங்குள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் மிதப்பதாக, செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சென்று உடலை மீட்டனர். அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சட்டக் கல்லுாரி மாணவருக்கு 'வெட்டு'புழல்: சென்னை புழல், காந்தி 3வது தெருவைச் சேர்ந்தவர் குமணன், 27, ஆந்திர மாநில சட்டக் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, புழல், காந்தி பிரதான சாலையில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஆட்டோவில் அங்கு சென்ற டில்லிபாபு என்பவர் உட்பட ஐவர், குமணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். காயமடைந்த குமணன் சிகிச்சையில் உள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாகவும், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போதை மாத்திரை விற்றவர் கைது: கொடுங்கையூர்: கொடுங்கையூரில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மூலக்கடை அருகே நேற்று ரோந்தில் ஈடுபட்டனர்.அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றவரிடம் சோதனை செய்ததில், 3௫0 வலி நிவாரண மாத்திரைகள் சிக்கின. விசாரணையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சுபாஷ், 19, என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, போதை மாத்திரை எனக் கூறி கொடுங்கையூரில் விற்றதும் தெரிய வந்தது.இவர், 10 ரூபாய்க்கு ஒரு மாத்திரை வாங்கி, அதை 100 ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது. சுபாஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

'பைக்'கில் இருந்த பணம் 'அபேஸ்'கோயம்பேடு: நெற்குன்றம், வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர் திலீப்குமார், 53. நேற்று முன்தினம் இவர், நகையை அருகில் உள்ள வங்கியில் அடகு வைத்துவிட்டு, 4.29 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார்.பின், அப்பணத்தை தன் இரு சக்கர வாகனத்தின் இருக்கையில் அடியில் வைத்து விட்டு, அருகில் உள்ள 'டாஸ்மாக்' கடைக்கு சென்றார். மது பாட்டில் வாங்கி திரும்பும்போது, வாகனத்தில் வைத்திருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் துாக்கிட்டு தற்கொலைகோயம்பேடு: நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்தவர் சீனு, 19; கூலித் தொழிலாளி. இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுக்கு இரண்டு மாதத்திற்கு முன் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் விரக்தியில் இருந்த சீனு, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

ஆட்டோ ஓட்டுனரிடம் வழிப்பறிவியாசர்பாடி: வால்டாக்ஸ் ரோடு உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், 26; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, பேசின் பாலம், மின் வாரிய அலுவலகம் அருகில் ஆட்டோவில் நின்றிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர், தினேஷ் குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன், அரை சவரன் செயின், 800 ரூபாய் உள்ளிட்டவற்றை பறித்து சென்றார்.இது குறித்து வியாசர்பாடி போலீசார், கணேசபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X