பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலையில் 15 நாட்களில் 687 டன் கழிவு அகற்றம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சென்னை: சென்னையில் உள்ள நீர்நிலைகளில், 15 நாட்களில், 687 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியின் மழை நீர் வடிகால் துறையின் சார்பில், 48.80 கி.மீ., நீளமுள்ள, 30 நீர்வழிக்கால்வாய்கள் பராமரிக்கப்படுகின்றன. இந்த நீர்வழிக்கால்வாய்களில், பருவமழைக்கு முன், நவீன இயந்திரங்கள் கொண்டு, ஆகாயத்தாமரைகள்
 நீர்நிலையில் 15 நாட்களில் 687 டன் கழிவு அகற்றம்

சென்னை: சென்னையில் உள்ள நீர்நிலைகளில், 15 நாட்களில், 687 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியின் மழை நீர் வடிகால் துறையின் சார்பில், 48.80 கி.மீ., நீளமுள்ள, 30 நீர்வழிக்கால்வாய்கள் பராமரிக்கப்படுகின்றன. இந்த நீர்வழிக்கால்வாய்களில், பருவமழைக்கு முன், நவீன இயந்திரங்கள் கொண்டு, ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு, வண்டல் மண் துார் வாரப்படுகிறது.

இதன் வாயிலாக, நீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் பராமரிக்கப்படுகிறது. அதன்படி, ஆக., 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை, ஆகாயத்தாமரைகள், வண்டல் மண் மற்றும் குப்பை கழிவுகள் என, 687 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.இவை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X