பொது செய்தி

தமிழ்நாடு

மாங்காடில் பஸ் நிலையம் பக்தர்கள் கோரிக்கை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மாங்காடு: கோவில்களுக்கு பிரசித்து பெற்று விளங்கும் மாங்காடில், பக்தர்கள் வசதிக்காக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில், நவகிரக ஸ்தலங்களில் ஒன்றான வெள்ளீஸ்வரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன.சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும்,

மாங்காடு: கோவில்களுக்கு பிரசித்து பெற்று விளங்கும் மாங்காடில், பக்தர்கள் வசதிக்காக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில், நவகிரக ஸ்தலங்களில் ஒன்றான வெள்ளீஸ்வரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன.

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஏராளமானோர், இந்த கோவில்களுக்கு வந்து செல்கின்றனர்.மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு, ஆண்டு முழுதும் பக்தர்கள் வருகை காணப்படுகிறது. எனினும், இங்கு பஸ் நிலையம் இல்லை. வெளியூர்களில் இருந்து பஸ், வேன், கார்களில் வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை, குன்றத்துார்- - குமணன்சாவடி சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்ல வேண்டிஉள்ளது.கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், சில மீட்டர் துாரத்திற்கு முன்பே, வாகனங்களை நிறுத்தி, நடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால், பக்தர்கள் சிரமப்படுவதோடு, குன்றத்துார்- - குமணன்சாவடி சாலையில், 'பீக் அவர்' நேரத்தில் கடும் நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, மாங்காடில், பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை நீண்ட நாட்களாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. இந்நிலையில், குன்றத்துார்- - குமணன்சாவடி சாலையை ஒட்டியுள்ள, கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கழிவு நீர் தேங்கியிருப்பதை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, இப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை, அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X