இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்:விஷம் குடித்த காதல் ஜோடி: பெண் பலிஈரோடு: மதுவில் விஷம் கலந்து குடித்த ஜோடியில், காதலி இறந்தார்.கேரள மாநிலம் ஆலப்புழா, அடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 26. திருச்சூர் மாவட்டம் கொடுங்கலுாரைச் சேர்ந்தவர் சுருதி கார்த்திகா, 22; காதலர்கள்.கொடைக்கானல் செல்ல ரயிலில் நேற்று முன்தினம் ஈரோடு வந்தனர். இருவருக்கும் வழியிலேயே கருத்து
Crime, Murder, crime roundup


தமிழக நிகழ்வுகள்:விஷம் குடித்த காதல் ஜோடி: பெண் பலி


ஈரோடு: மதுவில் விஷம் கலந்து குடித்த ஜோடியில், காதலி இறந்தார்.

கேரள மாநிலம் ஆலப்புழா, அடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 26. திருச்சூர் மாவட்டம் கொடுங்கலுாரைச் சேர்ந்தவர் சுருதி கார்த்திகா, 22; காதலர்கள்.கொடைக்கானல் செல்ல ரயிலில் நேற்று முன்தினம் ஈரோடு வந்தனர். இருவருக்கும் வழியிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், காளைமாட்டு சிலை அருகில், இருவரும் மதுவில் விஷம் கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.சூரம்பட்டி போலீசார் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுருதி கார்த்திகா நேற்று இறந்தார். ஹரிகிருஷ்ணன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.


ராம்குமார் தற்கொலை; விசாரணை தீவிரம்


மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் தற்கொலை விவகாரம் குறித்து, சிறைத் துறை அதிகாரிகளிடம் மனித உரிமை கமிஷன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளது.


பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை


துாத்துக்குடி: துாத்துக்குடி சி.எஸ்.ஐ., திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அகரம்பஞ்சாயத்து தலைவர் பொன்சீலன், 45. அ.தி.மு.க., பிரமுகர். முன்விரோதங்களால், துாத்துக்குடி முத்தையாபுரத்தில் வசித்து வந்தார். இவர், தற்போது நடக்கும் துாத்துக்குடி - நாசரேத் சி.எஸ்.ஐ., திருமண்டலத் தேர்தலில் போட்டியிட்டு, பெருமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

அகரத்தில் நடந்த கோவில் கொடை விழாவை ஒட்டி, பஞ்சாயத்து துணைத் தலைவர் தவசிக்கனி வீட்டில் சாப்பிட நேற்று அங்கு சென்றிருந்தார். அப்போது, அவரது வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நான்கு பேர் கும்பல், பொன்சீலனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, தப்பியது.


திருச்சி மத்திய சிறையில் 10 பேர் தற்கொலை முயற்சி


திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த 10 கைதிகள், தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 63 பேர் மற்றும் வங்க தேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 30 பேர், என 93 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்டவர்கள், அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை தின்று, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்களில், டிக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பவர் வயிற்று பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு துாக்க மாத்திரைகள், பிளேடு கிடைத்தது எப்படி என விசாரணை நடக்கிறது.


பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு: ஏ.பி.டி.ஓ., கைது


தஞ்சாவூர்:பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முருகானந்த வள்ளி, 48; கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த விஜயகுமார், 58, தற்போது, திருவோணம் யூனியனில், துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார். முருகானந்த வள்ளியின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்ததை, விஜயகுமாருக்கு சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விஜயகுமார், இது பற்றி முருகானந்த வள்ளியிடம் கேட்டுள்ளார்.

அதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, விஜயகுமார் ஆபாசமாக திட்டியுள்ளார். முருகானந்த வள்ளிக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக, முருகானந்த வள்ளியின் மகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார். இது பற்றி கேட்ட போது, விஜயகுமார் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். முருகானந்த வள்ளி புகார்படி, தஞ்சை மருத்துவக் கல்லுாரி போலீசார், விஜயகுமாரை கைது செய்தனர்.


சண்டை போடாதீங்கப்பா... விலக்கியவருக்கு 'கத்திக்குத்து'


கோவை : சண்டையை விலக்கி விட்டு சமாதானம் செய்ய முயன்ற, ஆம்புலன்ஸ் டிரைவர் கத்தியால் குத்தப்பட்டார்.

உக்கடம், புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா, 25; தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் திருச்சி ரோடு, அரசு மருத்துவமனை முன் நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்தார்.அப்போது அங்கு இரண்டு பேர், தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த டிரைவர், அவர்களை விலக்கி விட்டு கண்டித்தார்.

அதில் ஒருவர் ஆத்திரமடைந்து, கத்தியால் டிரைவரை சரமாரியாக குத்தினார். காயமடைந்த டிரைவரை அருகே இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், டிரைவரை கத்தியால் குத்தியது புலியகுளத்தை சேர்ந்த குண்டு மணிகண்டன், 35 என்பது தெரிந்து கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


latest tamil news
இந்திய நிகழ்வுகள்:பாக்., கல்லுாரியில் சீட்: 4 பேர் கைது


ஸ்ரீநகர்: பாக்., மருத்துவக் கல்லுாரிகளில் ஜம்மு - காஷ்மீர் மாணவர்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்த நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் நான்கு பேரும் ஹூரியத் அமைப்பு வாயிலாக மாணவர்களுக்கு சீட் வாங்கிக்கொடுத்தது அம்பலமாகி உள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி பெற்று, அதற்கு பதிலாக மாணவர்களுக்கு சீட் வாங்கித் தந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நீதிபதிக்கு கொலை மிரட்டல்


கோட்டா: ராஜஸ்தானில், பூண்டி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சுதிர் பரிக்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி கொடுத்த புகாரை அடுத்து, அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள போலீசார், மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.


பா.ஜ., ஆர்ப்பாட்டம்


புதுடில்லி: அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், சீக்கிய மஹாராஜா ரஞ்சித் சிங் சிலை சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டது. இதை கண்டித்து, டில்லியின் பா.ஜ., இளைஞர் அணி மற்றும் சீக்கிய பிரிவினர் உள்ளிட்டோர், அங்குள்ள பாக்., துாதரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மெஹபூபா தாயிடம் விசாரணை


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் தாய் குல்ஷன் நசீர், 78, பண மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி, அமலாக்கத் துறையினர் 'சம்மன்' அனுப்பி இருந்தனர்.இதன்படி, ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான குல்ஷன் நசீரிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மெஹபூபா முப்தியும் அங்கு வந்திருந்தார்.


மின்னல் தாக்கி 4 பேர் பலி


ஷாஹ்தோல்: மத்திய பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டம் ஜெய்த்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி 15 வயது சிறுவன், 22 வயது இளைஞர் பலியாகினர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டம் குதேவா கிராமத்தில் இடியுடன் மழை பெய்ததில், மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.


போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தை படம் பிடித்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் கேமராக்களை சேதப்படுத்தினர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ஜம்மு - காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி., தில்பாக் சிங் நேற்று உத்தரவிட்டார்.


சவுதியில் இருந்து 'முத்தலாக்'


பதேபூர்: உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த தசாப்புல், சவுதி அரேபியாவில் பணியில் உள்ளார். வரதட்சணை பிரச்னை தொடர்பாக மனைவி ரசியா பானோவை சமீபத்தில் தொலைபேசியில் அழைத்து, மூன்று முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்து உள்ளார்.ரசியா பானோவின் புகார் தொடர்பாக, கணவர் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


உலக நிகழ்வுகள்:சிலை உடைப்பு


காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து சண்டையிட்டு, 1996ல் படுகொலை செய்யப்பட்ட ஷியா பிரிவின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை, தலிபான்கள் உடைத்து சேதப்படுத்தினர். ஜலாலாபாத் நகரத்தில் தலிபான்களுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள், அங்கு ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை ஏற்றினர். தலிபான்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தை கலைப்பதற்காக அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த தலிபான் பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று பேர் இறந்தனர்.


பெண்ணை பந்தாடிய 400 பேர் மீது வழக்கு


லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஆசாதி சவுக் பகுதியில் நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி, 14ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடினர். அப்போது அவர்களில் சிலர், ஒரு இளம்பெண்ணை துாக்கி வீசுவதுடன், அவரின் உடைகளை கழற்றியும், கிழித்தும் கொடுமைப்படுத்தும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக, 400 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X