பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மூடல் ‛தினமலர்' செய்தி எதிரொலி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தாம்பரம்: உரிய பராமரிப்பின்றி கிடந்த தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில், சட்டவிரோத செயல்கள் நடப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, சுரங்கப்பாதை படிக்கட்டுகள் சுத்தம் செய்யப்பட்டு, அதற்கு செல்லும் பாதை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. தாம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே, 3.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை, 2019 மார்ச்சில்
 தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மூடல் ‛தினமலர்' செய்தி எதிரொலி

தாம்பரம்: உரிய பராமரிப்பின்றி கிடந்த தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில், சட்டவிரோத செயல்கள் நடப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, சுரங்கப்பாதை படிக்கட்டுகள் சுத்தம் செய்யப்பட்டு, அதற்கு செல்லும் பாதை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.

தாம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே, 3.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை, 2019 மார்ச்சில் திறக்கப்பட்டது.தற்போது பயனற்று கிடக்கிறது. இதில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் சேதமடைந்து, சமீபத்தில் பெய்த மழையால், தண்ணீரும் தேங்கிஉள்ளது.கண்காணிப்பு கேமராக்களும் இல்லாததால், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சுரங்கப்பாதை முழுதும் மனிதக் கழிவு, ஆணுறை, காலி மதுபாட்டில், பீடி, சிகரெட் துண்டுகள் உள்ளிட்டவை சிதறிக் கிடக்கின்றன.

இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து, தாம்பரம் நகராட்சி ஊழியர்கள் சுரங்கப்பாதையின் நுழைவு பகுதியை சுத்தம் செய்தனர்.உட்புற பகுதியை சுத்தம் செய்ய, ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்காததால், சுத்தம் செய்ய முடியவில்லை என, ஊழியர்கள் தெரிவித்தனர். பின், தாம்பரம் போலீசார் ஆய்வு செய்து, 'பேரிகார்டு' வைத்து, சுரங்கப்பாதை நுழைவாயிலை அடைத்தனர். எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர். எனினும், சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு பயணியர் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

ரயில்வே நிர்வாகம் அலட்சியம்தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை திறக்கப்பட்டது முதல் தொடர்ந்து பயனற்றுக் கிடப்பது பற்றி, நம் நாளிதழில் பல முறை செய்தி வெளியாகியும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை. இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:பயன்பாடற்று கிடக்கும் சுரங்கப்பாதையில், இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்களும் அரங்கேறுகின்றன. சுரங்கப்பாதையின் முன்பகுதியில் தடுப்பு வைத்து அடைப்பதால் மட்டுமே, அங்கு நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க முடியாது. அதிலுள்ள விளக்குகள் சீரமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மட்டுமே, அதை முறையாக பராமரிக்க முடியும். ரயில்வே வாரிய அதிகாரிகள், இனியும் அலட்சியம் காட்டாமல், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X