சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலைகளில் 'மெகா சைஸ் பேனர்'கள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சட்டவிரோதமான முறையில் வைக்கப்படும் 'மெகா சைஸ்' பேனர்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.அதிக வேகம்,மோசமான சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும்
 நெடுஞ்சாலைகளில் 'மெகா சைஸ் பேனர்'கள்  வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சட்டவிரோதமான முறையில் வைக்கப்படும் 'மெகா சைஸ்' பேனர்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.அதிக வேகம்,மோசமான சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலையில், சாலையோரங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள மெகா சைஸ் பேனர்களால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தனியார் விளம்பர முகவர்கள், தேசிய நெடுஞ்சாலையோர அடுக்குமாடி கட்டடங்களின் மீதும், காலி நிலங்களிலும், 20 முதல் 50 அடி உயரத்திற்கு இரும்பு துாண்களை நட்டு, 'மெகா சைஸ்' பேனர்களை வைக்கின்றனர்.இந்த பேனரில் உள்ள விளம்பரங்களில் நடிகர், நடிகையரின் படங்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனால், பயணத்தின் போது கவனத்தை இழக்கும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலையில் வைக்கப்படும் 90 சதவீத பேனர்கள், முறையாக அனுமதி பெறப்படுவதில்லை. இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்றி, அதை வைப்போர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் வெங்கடேசன் கூறியதாவது:நெடுஞ்சாலையோரம் பட்டா நிலத்தில் விளம்பர பதாகை வைத்தாலும், கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பதாகை வைப்போர் மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.குறுக்கு வழியை நாடும் நிறுவனங்கள்விளம்பர பதாகைகள் வைக்க, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்ததும், வட்டார வளர்ச்சி அலுவலர், பதாகை அளவு, அதை வைக்கும் இடம், இரும்பு துாண்களின் உறுதி குறித்து ஆய்வு செய்து, அதற்கான கட்டண விபரத்தை, மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்துவார்.

கலெக்டர் அனுமதிக்கு பிறகே பேனர் வைக்கப்படும். ஆனால், அதுபோல் இப்போது நடப்பதில்லை. பட்டா நிலத்தில் தனியார் நிறுவனம் பதாகை வைப்பதால், அரசிடம் அனுமதி கோருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-202105:35:02 IST Report Abuse
Mani . V அரசு மற்றும் அதிகாரிகள்: "யார் வீட்டில் எழவு விழுந்தா எங்களுக்கென்ன? எங்களுக்கு வரவேண்டிய கமிஷன் வந்து விட்டது"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X