பொது செய்தி

தமிழ்நாடு

புகையிலை விற்ற கடைக்கு 'சீல்' 302 கிலோ 'குட்கா' பறிமுதல்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மடிப்பாக்கம்: மடிப்பாக்கத்தில் மொத்த விற்பனையகத்தில் இருந்து, 302 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.மடிப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள மொத்த விற்பனை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, போலீசார் அதிரடி

மடிப்பாக்கம்: மடிப்பாக்கத்தில் மொத்த விற்பனையகத்தில் இருந்து, 302 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, அக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.மடிப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள மொத்த விற்பனை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், கடையில் இருந்த 302 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து, பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் பாஸ்கர் உத்தரவின்படி, மண்டல உதவி வருவாய் அலுவலர் பிரகாஷ் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் கடைக்கு 'சீல்' வைக்க முயன்றனர்.வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X