நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Added : ஆக 19, 2021
Share
சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு புகுந்ததால், பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்றிரவு, 7:50 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலையம், ஏழாவது நடைமேடையில் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது.'எஸ் 1' பெட்டியில், இருக்கை எண், 44 அருகே பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த பயணியர், அலறியடித்து பெட்டியை விட்டு
 நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு புகுந்ததால், பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்றிரவு, 7:50 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலையம், ஏழாவது நடைமேடையில் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது.'எஸ் 1' பெட்டியில், இருக்கை எண், 44 அருகே பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த பயணியர், அலறியடித்து பெட்டியை விட்டு கீழே இறங்கினர்.

உடனடியாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஊழியர்கள் அந்த பெட்டியில் ஏறி, சோதனையிட்ட போது, 3 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு இருப்பது தெரியவந்தது. அதை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதன் பின், பயணியர் ரயிலில் ஏற, ரயில் புறப்பட்டு சென்றது.இதேபோல், தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பூங்காவில் புகுந்த சாரை பாம்பு மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X