கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோத முறையில் கட்டடம் கட்டிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு ஐகோர்ட் குட்டு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், சட்ட விரோத முறையில் கட்டப்படும் கட்டுமானத்தை உடனடியாக இடிக்க, மாநகராட்சி கமிஷனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சொந்த செலவுசென்னை, பாலவாக்கத்தை சேர்ந்த விஜயபாரதி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஓ.எம்.ஆர்., எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில்,

சென்னை: சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், சட்ட விரோத முறையில் கட்டப்படும் கட்டுமானத்தை உடனடியாக இடிக்க, மாநகராட்சி கமிஷனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சொந்த செலவு

சென்னை, பாலவாக்கத்தை சேர்ந்த விஜயபாரதி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஓ.எம்.ஆர்., எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில், சோழிங்கநல்லுார் தொகுதியை சேர்ந்த தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் அலுவலகம் அமைந்து உள்ளது.அதன் வளாகத்தில் சட்ட விரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுகிறது.

அரசு நிலத்தில், தனி நபர்கள் கட்டுமானங்களை உருவாக்குவது சட்ட விரோதம். இது தொடர்பாக ஜூலை 9ம் தேதி, சென்னை மாநகராட்சி கமிஷனர், 15வது மண்டல அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்ட விரோத கட்டடத்தை அகற்றவும், மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் பிரஷ்னேவ் மற்றும் இனியன் வாதாடினர்.சென்னை மாநகராட்சி தரப்பில், தன் அலுவலக வளாகத்தில், கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்ததாகவும், அதை பொதுப்பணித் துறை செய்து கொடுக்காததாலும் எம்.எல்.ஏ., தன் சொந்த செலவில், கூட்ட அரங்கை கட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது.உத்தரவுவிசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:எம்.எல்.ஏ.,வின் இந்த செயலை ஏற்க முடியாது. இதில், தீவிர அராஜக செயலுக்கான முகாந்திரம் இருக்கிறது. எவ்வளவு உன்னதமான நோக்கமாக இருந்தாலும், அரசு துறைகள் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதற்காக, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது.த

னிநபரால், அரசு நிலத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தை இடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சி கமிஷனர் உடனடியாக எடுக்க வேண்டும்.வேறு காரணங்களுக்காக அந்த இடம் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது. சட்ட விரோத கட்டுமானத்தின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து, ஒரு வாரத்தில் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X