விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ இரண்டாம் கட்டத்திலேயே முடிக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ இரண்டாம் கட்டத்திலேயே முடிக்க கோரிக்கை

Added : ஆக 19, 2021
Share
சென்னை: 'மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடக்கும் போதே, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை பணியையும் முடிக்க, அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுஉள்ளது.இது குறித்து, தாம்பரம், வண்டலுார் ஐ.டி., நிறுவன பணியாளர்கள் சார்பில், மெட்ரோ நிறுவனத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை:தமிழக அரசின், 2021 - 22 பட்ஜெட்டில், மெட்ரோ இரண்டாம் கட்ட திட்ட பணிகள்,

சென்னை: 'மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடக்கும் போதே, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை பணியையும் முடிக்க, அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுஉள்ளது.

இது குறித்து, தாம்பரம், வண்டலுார் ஐ.டி., நிறுவன பணியாளர்கள் சார்பில், மெட்ரோ நிறுவனத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை:தமிழக அரசின், 2021 - 22 பட்ஜெட்டில், மெட்ரோ இரண்டாம் கட்ட திட்ட பணிகள், 2026க்குள் முடியும் என, தெரிவித்திருப்பதுடன், விமான நிலையம் - கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையம் இடையே மெட்ரோ பாதை திட்டம் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையம் கட்டுமான திட்டத்தில், கட்டுமான பணிகளில் ஒரு பகுதி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இப்பணி, 2023க்குள் முழுமையாக முடியும். பஸ் முனையம் திறக்கப்படும் போது, தென் மாவட்டங்களில் இருந்து பஸ்களில் வரும் பயணியர், கிளாம்பாக்கத்தில் இருந்து, சென்னை செல்வதற்கு வாகன போக்குவரத்து அதிகம் தேவையாகும். இந்நிலைகளால், இரண்டாம் கட்ட திட்ட பாதை பணிகள் நடக்கும் போதே, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை பணியும் நடைபெற திட்டமிட வேண்டும்.

இதன் மூலம், தென் மாவட்ட பயணியர் மற்றும், சென்னை புறநகரில் பணியாற்றும் பணியாளர்கள் பயனடைவர். ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். இவ்வாறு, கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X