அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முன்பை விட வேகமாக மத்திய அரசை எதிர்ப்போம்: உதயநிதி ஸ்டாலின்

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (137)
Share
Advertisement
சென்னை : ''மத்திய அரசு மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால் பாராட்ட தயாராக உள்ளோம். ஆனால் தவறிழைக்கும் பட்சத்தில் முன்பை விட இன்னும் வேகமாக அதை சுட்டிக்காட்டி வமர்சிப்போம்'' என தி.மு.க. - எம்.எல்.ஏ. உதயநிதி தெரிவித்தார்.சட்ட சபையில் அவர் பேசியதாவது: தமிழகத்துக்கு 15 ஆயிரத்து 475 கோடி ரூபாய் அளவு ஜி.எஸ்.டி. பாக்கி மத்திய
DMK, Udhayanidhi Stalin, Udhayanidhi

சென்னை : ''மத்திய அரசு மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால் பாராட்ட தயாராக உள்ளோம். ஆனால் தவறிழைக்கும் பட்சத்தில் முன்பை விட இன்னும் வேகமாக அதை சுட்டிக்காட்டி வமர்சிப்போம்'' என தி.மு.க. - எம்.எல்.ஏ. உதயநிதி தெரிவித்தார்.


சட்ட சபையில் அவர் பேசியதாவது:


தமிழகத்துக்கு 15 ஆயிரத்து 475 கோடி ரூபாய் அளவு ஜி.எஸ்.டி. பாக்கி மத்திய அரசிடமிருந்து வர வேண்டி உள்ளது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒற்றை செங்கல் நட்டு வைத்ததோடு அப்படியே உள்ளது. இந்த பிரச்னை நாடு முழுதும் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அறிவியல்பூர்வமாக தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் 'கை தட்டுங்கள்; மணி அடியுங்கள்; விளக்கேற்றுங்கள்' என மூட நம்பிக்கை வழியாக அணுகியதால் தான் கொரோனா பேரழிவு ஏற்பட்டது.


latest tamil newsமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியமிக்க நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதும் தொடர்கிறது. மத்திய அரசின் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால் அதை ஏற்கவும் பாராட்டவும் தயாராக உள்ளோம். ஆனால் தவறிழைக்கும் பட்சத்தில் முன்பை விட இன்னும் வேகமாக அதை சுட்டிக்காட்டுவோம்; விமர்சிப்போம். முதல்வர் எங்களை கண்ணியமாக நடந்து கொள்ள சொல்லியிருக்கிறாரே தவிர அடிமையாக இருக்க சொல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (137)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
22-ஆக-202120:12:06 IST Report Abuse
dina செங்கலை கையில் வெச்சுகிட்டு சினிமா டயலாக் பேசி சொற்ப வோட்டு வித்தியாசத்தில் ஜெயித்து சட்டசபையை நுழைந்து ஆராஜம் பேசுகிறது எத்தனை நாளைக்கு ?
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-ஆக-202111:24:58 IST Report Abuse
Thiagarajan Kodandaraman UNGA THATHA SAMAATHIYILA THAYIR VADAI VAIPPATHU ENNA NAMBIKKAI ,,,THIANAMUM PALA AAYIRAM ROOBAIKKU MALAR ALANGAARAM ENDHA NAMBIKKAI
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
19-ஆக-202122:14:26 IST Report Abuse
adalarasan ஒரே வரியில் கூறவேண்டுமென்றால்,அர்த்தமற்ற பேச்சுஅன்ஹுபாவம் இல்லைபாவம், போராட்டம், எதிர்ப்பு வொன்றுதான் தெரியும்என்று கா ட்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X