பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கும் மக்கள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட தமிழக கூட்டுறவு நிறுவனங்களில், பொதுமக்கள் நகைகள் அடகு வைத்து, அதற்கு ஈடாக கடன் தொகை பெற்றுள்ளனர்.அரசியல் கட்சிகள், நகை, பயிர் கடன்கள் ஆகியவற்றை ரத்து செய்வதாக, தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கும். இதை நம்பி, பெரும்பாலானோர் கடனை திருப்பி செலுத்தாமல் தாமதிக்கின்றனர்.கடந்த சட்டசபை

மாமல்லபுரம்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட தமிழக கூட்டுறவு நிறுவனங்களில், பொதுமக்கள் நகைகள் அடகு வைத்து, அதற்கு ஈடாக கடன் தொகை பெற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகள், நகை, பயிர் கடன்கள் ஆகியவற்றை ரத்து செய்வதாக, தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கும். இதை நம்பி, பெரும்பாலானோர் கடனை திருப்பி செலுத்தாமல் தாமதிக்கின்றனர்.கடந்த சட்டசபை தேர்தலின்போது, 5 சவரன் நகை கடன்தாரர்களின் கடனை ரத்து செய்வதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

இக்கட்சி ஆட்சி பொறுப்பேற்று, 100 நாட்கள் கடந்த நிலையில், 5 சவரன் நகை கடன்தாரர்கள் விபரம் குறித்து தெரிவிக்க, கூட்டுறவு துறை தற்போது அறிவித்துள்ளது.ஆய்வின் அடிப்படையில், குறிப்பிட்ட நபர்களின் கடன் மட்டுமே ரத்து செய்யப்படலாம். அதாவது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு மட்டும் ரத்து செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்கள், கடந்த மார்ச் 31 வரை, 5 சவரன் மற்றும் அதற்கும் குறைவான கடன்தாரர்களின் குடும்ப அட்டை நகல் வழங்க, மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பி, அதை பெறுகின்றன. பெறப்படும் அட்டை வகைகளை பொறுத்து, கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X