நாளொன்றுக்கு 30 டோக்கன் ஆதார் மையத்தில் காத்திருப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில், 'டோக்கன்' பெற அதிகாலை முதல் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். கூடுதல் மையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை -- சோளிங்கர் சாலையில் உள்ளது ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம். இதே வளாகத்தில், ஆதார் சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.நாளொன்றுக்கு, 30 பேருக்கு,

ஆர்.கே.பேட்டை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில், 'டோக்கன்' பெற அதிகாலை முதல் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். கூடுதல் மையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை -- சோளிங்கர் சாலையில் உள்ளது ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம். இதே வளாகத்தில், ஆதார் சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.நாளொன்றுக்கு, 30 பேருக்கு, டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களுக்கு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு, டோக்கன் வழங்கப்படுகிறது.இந்த டோக்கன் வாங்குவதற்காக, அதிகாலை, 5:00 மணி முதல், பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

30க்கும் மேற்பட்டு வருபவர்களுக்கு டோக்கன் கிடையாது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.பொதுமக்களின் பல்வேறு பணிகளுக்கு, ஆதார் அட்டை கட்டாயம் என்பதால், ஆதார் விண்ணப்பம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக, தினசரி ஏராளமானோர் இந்த சேவை மையத்திற்கு வந்து காத்திருக்கின்றனர்.மேலும், கூடுதலான பணியாளர்களை நியமித்து, அதிக எண்ணிக்கையிலான பேருக்கு, சேவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X