பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் அச்சம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்: ஆபத்தான நிலையில் உள்ள சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என, காரியமங்கலம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சி, திருவள்ளுவர் தெருவில் மழை நீர் வெளியேறும் கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறு பாலம் சேதமடைந்து, ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.இவ்வழியாக கார், வேன், லாரி சென்று வந்த நிலையில், பாலம் சேதமடைந்து
 சேதமடைந்த சிறுபாலம் வாகன ஓட்டிகள் அச்சம்

உத்திரமேரூர்: ஆபத்தான நிலையில் உள்ள சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என, காரியமங்கலம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சி, திருவள்ளுவர் தெருவில் மழை நீர் வெளியேறும் கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறு பாலம் சேதமடைந்து, ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இவ்வழியாக கார், வேன், லாரி சென்று வந்த நிலையில், பாலம் சேதமடைந்து குறுகியுள்ளதால், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. மேலும், வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் சிறுபாலத்தின் வளைவில் திரும்பும்போது, கால்வாயின் இடிந்த பகுதி பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது.எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள், சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காரியமங்கலம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X