நிலம் பிரித்து கொடுக்காததால் விரக்தியில் விவசாயி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் பிரித்து கொடுக்காததால் விரக்தியில் விவசாயி தற்கொலை

Added : ஆக 19, 2021
Share
திருத்தணி: திருத்தணியில் நிலம் பிரித்து கொடுக்காததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.திருத்தணி அடுத்த சிறுகுமி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் சுப்ரமணி, 58. இவரது சகோதரர் நாகபூசணம், 60.இந்நிலையில், சுப்ரமணிக்கு சொந்தமான அனைத்து நிலங்களுக்கும் நாகபூசணம் பெயரில் பட்டா இருந்தது. சுப்ரமணி, பலமுறை சகோதரரிடம் தன் நிலத்தை பிரித்து, தன் பெயரில் எழுதி

திருத்தணி: திருத்தணியில் நிலம் பிரித்து கொடுக்காததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.திருத்தணி அடுத்த சிறுகுமி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் சுப்ரமணி, 58. இவரது சகோதரர் நாகபூசணம், 60.இந்நிலையில், சுப்ரமணிக்கு சொந்தமான அனைத்து நிலங்களுக்கும் நாகபூசணம் பெயரில் பட்டா இருந்தது.

சுப்ரமணி, பலமுறை சகோதரரிடம் தன் நிலத்தை பிரித்து, தன் பெயரில் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.ஆனால், நாகபூசணம் காலம் தாழ்த்தி வந்ததால், சுப்ரமணி மனமுடைந்து காணப்பட்டார். இரு நாட்களுக்கு முன், சுப்ரமணி திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை

இந்நிலையில் நேற்று, சிறுகுமி அருகே உள்ள பகுதியில் ஒரு மரத்தில் சுப்ரமணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை, மாடுகள் மேய்க்க சென்றோர் பார்த்து, போலீசார், வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X