சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் ரூ.5.10 கோடியில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருத்தணி: திருத்தணி நகரத்தில், 5.10 கோடி ரூபாய் மதிப்பில், வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம், நேரடி கொள்முதல் நிலையம் புதிய கட்டடத்தில் திறந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.திருத்தணி ஒன்றியத்தில், விவசாயிகள் பயிரிடும் நெல், வேர்க்கடலை போன்ற தானியங்களை இருப்பு வைப்பதற்கும், நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்கும் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து,

திருத்தணி: திருத்தணி நகரத்தில், 5.10 கோடி ரூபாய் மதிப்பில், வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம், நேரடி கொள்முதல் நிலையம் புதிய கட்டடத்தில் திறந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

திருத்தணி ஒன்றியத்தில், விவசாயிகள் பயிரிடும் நெல், வேர்க்கடலை போன்ற தானியங்களை இருப்பு வைப்பதற்கும், நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்கும் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையின் பின்புறம் நான்கரை ஏக்கர் பரப்பில், தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய திட்டத்தின்கீழ், 2.40 கோடி ரூபாயில் ஒழுங்கு முறை விற்பனை கூடம், 1.40 கோடி ரூபாயில் நேரடி கொள்முதல் நிலையம் கட்டப்பட்டன.

முப்பது லட்சம் ரூபாயில் ஏல அரங்கு, 25 லட்சம் ரூபாயில், அலுவலகம் மற்றும், 75 லட்சம் ரூபாயில் விவசாயிகள் தங்கும் ஒய்வறை ஆகிய புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கட்டடங்கள் திறந்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட்டன.கார்த்திகேயபுரம், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், அகூர், அமிர்தாபுரம், திருத்தணி, தாடூர், பீரகுப்பம், செருக்கனுார், கோரமங்கலம், சிறுகுமி, சூர்யநகரம், கிருஷ்ணசமுத்திரம், வி.கே.ஆர்.புரம், வி.கே.என். கண்டிகை, டி.சி.கண்டிகை, மாம்பாக்கம், வீரகநல்லுார் மற்றும் எஸ்.அக்ரஹாரம் ஆகிய ஊராட்சி விவசாயிகள், நெல், வேர்க்கடலை போன்ற தானியங்களை இருப்பு வைத்தும், விற்பனை செய்தும் கொள்ளலாம்.வேளாண் ஓழுங்கு முறை கூடம் புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X