பொது செய்தி

தமிழ்நாடு

'காஸ்' குறைதீர் கூட்டம் நடக்குமா ?

Added : ஆக 19, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: 'காஸ்' நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என, நுகர்வோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக, மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆகியவைநடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில், கொரோனா

காஞ்சிபுரம்: 'காஸ்' நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என, நுகர்வோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக, மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆகியவைநடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டமும், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டமும் நடந்து வருகிறது.

ஆனால், காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டமும், நுகர்வோர் கூட்டமும் நடத்தப்படாமல் உள்ளது.இக்கூட்டங்களில் குறைவான நபர்களே பங்கேற்பர். இருப்பினும், கொரோனா காரணமாக நடத்தப்படாமல் உள்ளது.காஸ் நுகர்வோருக்கு பல்வேறு பிரச்னைகளும், சேவை குறைபாடுகளும் உள்ளன. எனவே, இக்கூட்டத்தை நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, நுகர்வோர் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X