தமிழ்நாடு

நான்கு வழிச்சாலையில் உலா வரும் கால்நடைகள்.. இதற்கோர் வழி காணுங்க!

Added : ஆக 19, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நான்கு வழிச்சாலை ஓரத்தில் கால்நடைகளை மேய்ப்பதாலும், அவை திடீரென ரோட்டின் நடுவே பாய்வதாலும், வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைகளை யொட்டி உள்ள பெரும்பான்மை கிராமங்களில் விவசாயத்தை காட்டிலும் மக்கள் அதிகளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரோட்டோரங்கள் கூட கால்நடை
நான்கு வழிச்சாலையில் உலா வரும் கால்நடைகள்.. இதற்கோர் வழி காணுங்க!

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நான்கு வழிச்சாலை ஓரத்தில் கால்நடைகளை மேய்ப்பதாலும், அவை திடீரென ரோட்டின் நடுவே பாய்வதாலும், வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.

மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைகளை யொட்டி உள்ள பெரும்பான்மை கிராமங்களில் விவசாயத்தை காட்டிலும் மக்கள் அதிகளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரோட்டோரங்கள் கூட கால்நடை மேய்ச்சல் நிலமாகின்றன. இதனால் விபத்து அபாயமும் அதிகரிக்கிறது. கால்நடைகள் திடீரென ரோட்டின் நடுவே வருவது, ரோட்டை கடக்க மந்தையாக நீண்ட நேரம் செல்வது போன்றவை நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனஓட்டகளை தடுமாற செய்வதோடு,விபத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சாத்துார், அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் உள்ள நான்கு வழிச்சாலை ஓரங்களில் கால்நடை மேய்ச்சல் சர்வசாதாரணமாக நடக்கிறது. இது மட்டுமன்றி டிடைரில் கூட கால்நடைகள் உலா வருகின்றன. கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியங்களால் வாகன ஓட்டிகள் மிக பெரிய பாதிப்புகளை சந்திக்கின்றனர். இதற்கோர் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீசார் மூலம் நடவடிக்கை

கால்நடைகளை ரோடு பகுதிகளில் மேயவிடும்போது தேவையற்ற விபத்துதான் ஏற்படுகிறது. இது கால்நடை உரிமையாளருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தேவையற்ற நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஈடுபடுவோர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திக், சமுக ஆர்வலர்,விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X