பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.80 லட்சம் கையாடல் செய்த செங்கை பி.டி.ஓ., 'சஸ்பெண்ட்'

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சென்னை: அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், இந்திராகாந்தி குடியிருப்பு திட்ட நிதியில் 80 லட்சம் ரூபாய் கையாடல் செய்த, வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் சசிகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுஉள்ளார்.செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மீதான செலவினம், நிதி விபரம் இருப்பு குறித்து, சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டது.உதவி

சென்னை: அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், இந்திராகாந்தி குடியிருப்பு திட்ட நிதியில் 80 லட்சம் ரூபாய் கையாடல் செய்த, வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் சசிகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுஉள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மீதான செலவினம், நிதி விபரம் இருப்பு குறித்து, சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டது.உதவி இயக்குனர் லதா தணிக்கை செய்தபோது, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், 2018 - 19ம் ஆண்டு இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில், 80 லட்சம் ரூபாய் நிதி மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இது குறித்த அறிக்கையை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் அவர் அளித்தார்.மேற்கொண்டு லதா விசாரித்தபோது, வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் சார்லஸ் சசிகுமார் என்பவர், அச்சிறுப்பாக்கத்தில் பணியாற்றியபோது இம்முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து, சார்லஸ் சசிகுமாரை, '17பி' விதியின் கீழ் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் ராகுல்நாத் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து பெயரிட விரும்பாத அரசு உயரதிகாரி கூறியதாவது:கடந்த 2018 - 19ம் ஆண்டில், இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்திற்கு வந்த நிதி, வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. அந்த நிதிக்கான வட்டி தொகையை, தனி வங்கி கணக்கு துவங்கி செலுத்தப்பட்டுள்ளது.இதன் வட்டி தொகையான, 80 லட்சம் ரூபாய், பல வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முறைகேடு நடந்துள்ளது. துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்கில் இருந்து வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அவர் பணியாற்றினால், விசாரணை முறையாக நடைபெறாதுஎன்பதால், சென்னையில்உள்ள ஊரக வளர்ச்சி முகமை நிர்வாகிகளிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X