பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வுகள் முடிந்து மாதமாச்சு... என்ன ஆச்சு புது பஸ் ஸ்டாண்ட்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஜூலை 17ல் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்து, ஒரு மாதம் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் காணோம்.பஸ்ஸ்டாண்டை 10 நாட்களுக்குள் சீரமைத்து தர நகராட்சி கமிஷனருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் பணிகள் முடிந்தும் செயல்பாடு

விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஜூலை 17ல் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்து, ஒரு மாதம் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் காணோம்.

பஸ்ஸ்டாண்டை 10 நாட்களுக்குள் சீரமைத்து தர நகராட்சி கமிஷனருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் பணிகள் முடிந்தும் செயல்பாடு நடவடிக்கையில் மவுனமே தொடர்கிறது. வழித்தடங்கள், அடிப்படை வசதிகள் தொடர்பாக வட்டாரப்போக்குவரத்து துறை, போக்குவரத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுடன் ஆய்வுக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

நகர்ப்பகுதியில் 75 ஆயிரம் மக்கள் இருந்தும் வெளியூர் சென்று வர ஒரு பஸ் ஸ்டாண்ட் கூட இல்லாதது பொதுமக்கள் மத்தியில் இன்று வரை பெரிய அதிருப்தியாகவே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் ஆய்வால் புத்துயிர் பெறும் நிலையில் இருந்த மக்கள் ,நடவடிக்கை இன்மையால் மீண்டும் துவண்டு போயுள்ளனர்.

கலெக்டர் கூறியதாவது: புது பஸ் ஸ்டாண்ட்டில் அடிப்படை வசதி, எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது குறித்து ஆய்வுக்கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.துவங்கிய பிறகு வேறு பிரச்னையால் மீண்டும் நின்று விட கூடாது என்பதற்காக தெளிவாக ஆலோசித்து வருகிறோம். விரைவில் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வரும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X