பொது செய்தி

தமிழ்நாடு

இவர்கள் குழந்தை எழுத்தாளர்கள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சென்னை: சமூக ஆர்வலர்கள் இணைந்து உருவாக்கிய'எழுதுக' இயக்கத்தின் மூலம், தமிழகம் முழுதும்100 மாணவ - மாணவியர் பல்வேறு தலைப்புகளில் புத்தகம் எழுதியுள்ளனர். இதில் 18 பேர் காஞ்சிபுரத்தை சேர்ந்தோர். பள்ளி, கல்லுாரி பருவத்திலேயே வாசிப்பு, புத்தகம் எழுதுவதில் இவர்கள் கொண்ட ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.கல்வி, தன்னம்பிக்கை, ராணுவம் சம்பந்தப்பட்ட தலைப்புகளில்

சென்னை: சமூக ஆர்வலர்கள் இணைந்து உருவாக்கிய'எழுதுக' இயக்கத்தின் மூலம், தமிழகம் முழுதும்100 மாணவ - மாணவியர் பல்வேறு தலைப்புகளில் புத்தகம் எழுதியுள்ளனர். இதில் 18 பேர் காஞ்சிபுரத்தை சேர்ந்தோர். பள்ளி, கல்லுாரி பருவத்திலேயே வாசிப்பு, புத்தகம் எழுதுவதில் இவர்கள் கொண்ட ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.கல்வி, தன்னம்பிக்கை, ராணுவம் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் குறித்து, அதை எழுதிய மாணவியர் இவ்வாறு கூறுகின்றனர்.

கே.அகல்விழி, 8ம் வகுப்பு, எஸ்.எஸ்.கே.வி., பள்ளி, காஞ்சிபுரம்:'உயிர் பெறும் காகிதங்கள்' என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் ராணுவ வீரர்கள் பற்றியும், ஐந்து பெரும் போர்கள் குறித்தும் எழுதியுள்ளேன்.ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு, எல்லைகள், எல்லை பாதுகாப்பு படை போன்ற விபரங்களை அதில் கொடுத்துள்ளேன்.என் தந்தை ராணுவ வீரர் என்பதால், அவர் சார்ந்து இதை எழுதினேன். நாட்டின் ஐந்து ராணுவ கிராமங்கள் குறித்தும் எழுதியிருக்கிறேன்.

எஸ்.ஸ்வேதா, மாணவி, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி, காஞ்சிபுரம்:கல்லுாரியின் 'வாட்ஸ் ஆப்' குழு மூலமாக, 'எழுதுக' இயக்கம் குறித்து அறிந்து, புத்தகம் எழுத ஆரம்பித்தேன். அக்குழு அவ்வப்போது பயிற்சி அளித்தது.'முதல் படி' என்ற தலைப்பில், தன்னம்பிக்கை மற்றும் கல்வி சார்ந்து, கவிதை நடையிலேயே எழுதியுள்ளேன். இது முதல் அங்கீகாரம். இனியும் நிறைய தலைப்புகளில் புத்தகம் எழுதுவேன்
பி.சுவர்ணலட்சுமி, பிளஸ் 2, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை:நான் 7ம் வகுப்பு முதல், கவிதை எழுதி வருகிறேன். 'எழுதுக' இயக்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றபோது ஊக்கமளித்தனர்.கவிதை நடையிலும், தலைப்புகளை அகர வரிசையிலும் புத்தகம் எழுதியுள்ளேன். சமூக பிரச்னைகள், நரபலி, வரதட்சணை, சமூக சிக்கல்கள் போன்றவை குறித்து எழுதியுள்ளேன்.

ஏ.பிருந்தா, பிளஸ் 2, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை:பள்ளி விழா ஒன்றில் ராணுவ வீரர்களின் தியாகம் போற்றும் கண்காட்சி நடந்தது. அதில் பேச்சு போட்டியில் பங்கேற்ற பின், புத்தகம் எழுதும் ஆர்வம் வந்தது. மின்னிதழ் ஒன்றில் எழுத ஆரம்பித்து, 'நம்பிக்கை வேர்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளேன். 35 கட்டுரைகள் அதில் உள்ளன.'இஸ்ரோ' ஆய்வாளர்கள் மற்றும்

'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் கொடுத்த ஊக்கத்தால் இதை எழுத முடிந்தது.மாணவ பருவத்திலேயே புத்தகம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துவதால், எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாகவும், படைப்பாளிகளாவும் உருவாக வாய்ப்பு ஏற்படும். அடுத்த பத்தாண்டுகளில் ஒரு லட்சம் புத்தகங்களை மாணவர்களை எழுத வைத்து, அதில் 1,000 புத்தகங்களையாவது அச்சு வடிவில் கொண்டு வர வேண்டும்.- 'எழுதுக' இயக்க நிர்வாகி ஒருவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X