பொது செய்தி

தமிழ்நாடு

நரிக்குறவர் வாரிய உதவிகளை பெற கலெக்டர் அழைப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மதுரை : ''மதுரை மாவட்டத்தில் நரிக்குறவர் நல வாரியம் வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற பதிவு பெற்ற உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என, கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர் விபத்தில் இறந்தால் ரூ.ஒரு லட்சம், ஊனமுற்றால் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம், இயற்கை மரணமடைந்தால் ரூ.20

மதுரை : ''மதுரை மாவட்டத்தில் நரிக்குறவர் நல வாரியம் வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற பதிவு பெற்ற உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என, கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர் விபத்தில் இறந்தால் ரூ.ஒரு லட்சம், ஊனமுற்றால் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம், இயற்கை மரணமடைந்தால் ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்குகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.கல்வி உதவியாக 10 மற்றும் 11 வது வகுப்பு படிக்கும் பெண்களுக்கு மட்டும் ரூ.1000, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.ஆயிரம், 12 ம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூ.1500, 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1500, பட்டப்படிப்புக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது.

திருமண உதவி தொகை ரூ.2000, மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வீதம் ரூ.ஆறாயிரமும், கருக் கலைப்பிற்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படுகிறது.நலத்திட்ட உதவிகளை பெற, நல வாரிய உறுப்பினராக தேவையான சான்றுகளுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X