ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்; வர்த்தக சங்கம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்; வர்த்தக சங்கம் வரவேற்பு

Added : ஆக 19, 2021
Share
மதுரை : நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி பொருட்கள் மீதான கட்டணங்கள், வரிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளதை மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது.அதன் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகம் இத்திட்டத்தின் கீழ் 8,555 ஏற்றுமதி பொருட்களுக்கு வரி நிவாரணம் அளிக்கிறது. மீன்வளம், விவசாயம்,

மதுரை : நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி பொருட்கள் மீதான கட்டணங்கள், வரிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளதை மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது.

அதன் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகம் இத்திட்டத்தின் கீழ் 8,555 ஏற்றுமதி பொருட்களுக்கு வரி நிவாரணம் அளிக்கிறது. மீன்வளம், விவசாயம், தோல், ரத்தினங்கள், நகைகள், ஆட்டோமொபைல்ஸ், பிளாஸ்டிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளை திட்டத்தில் கொண்டு வந்துள்ளனர். எக்கு, மருந்து, ரசாயன துறைகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மத்திய, மாநில, மூலப்பொருட்கள், போக்குவரத்து எரிபொருள் மீதான வாட், மண்டி, மின் உற்பத்தி வரிகள் ஏற்றுமதி செய்வோருக்கு திருப்பி தரப்படும். பால், மீன் உள்ளிட்டவைக்கு 0.5 சதவீதம் தக்காளி, வெங்காயம் ஆகிய விவசாய பொருட்களுக்கு 4 சதவீதம், புடவை, சட்டை துணி போன்ற ஜவுளி பொருட்கள் 4.3 சதவீதம் ஏற்றுமதி மதிப்பில் ஏற்றுமதி செய்வோருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் ஏற்றுமதி செய்வோருக்கு பயன் தரும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X