பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பெற்றோரை இழந்த 8 குழந்தைகள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் 8 குழந்தைகள் கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் இருப்பதாக குழந்தைகள் நலக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.கொரோனாவால் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்தது தொடர்பாக குழந்தைகள் நலக்குழு 389 குழந்தைகளின் நிலை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது. இதில் 8 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளதால் அரசின் ரூ.5

மதுரை : மதுரை மாவட்டத்தில் 8 குழந்தைகள் கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் இருப்பதாக குழந்தைகள் நலக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கொரோனாவால் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்தது தொடர்பாக குழந்தைகள் நலக்குழு 389 குழந்தைகளின் நிலை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது. இதில் 8 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளதால் அரசின் ரூ.5 லட்சம் நிவாரணம் பெற பரிந்துரைக்கப்பட்டதாக குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் எல்.சண்முகம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தாய், தந்தையை இழந்த 8 குழந்தைகள் பாதுகாவலரின் பராமரிப்பில் உள்ளனர். குழந்தையின் பராமரிப்புக்காக பாதுகாவலருக்கு மாதம் ரூ.3000 அரசு வழங்கும். குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு 18 வயது முடிவில் வழங்கப்படும். தாய் அல்லது தந்தையை இழந்த 185 குழந்தைகள் வறுமை நிலையில் உள்ளதாக அறிக்கையில் சமர்ப்பித்துள்ளோம். இவர்களுக்கு ரூ.3 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு 18 வயது முடிவில் வட்டியுடன் வழங்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X