பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்சக்தி திட்டம் கவர் ஸ்போரி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டமானது, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில் முடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒரு நகருக்கு கூட தண்ணீர் வரவில்லை என, புகார் எழுந்துள்ளது.மத்திய அரசின் 'ஜல்சக்தி' அமைச்சகத்தின் மூலம், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், கடந்தாண்டு கொண்டு வரப்பட்டது.அதன்படி காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டமானது, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில் முடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒரு நகருக்கு கூட தண்ணீர் வரவில்லை என, புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் 'ஜல்சக்தி' அமைச்சகத்தின் மூலம், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், கடந்தாண்டு கொண்டு வரப்பட்டது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'ஜல் ஜீவன்' திட்டப்பணி நடந்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில், இத்திட்டம் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறும் நிலையில், இதுவரை குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

இத்திட்டத்தில் சில பணிகள் தரமற்றதாகவும், அலட்சியமான முறையில் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.ஜல் ஜீவன் திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:l குறிப்பிட்ட ஆழத்தில் போட வேண்டிய ஆழ்துளை கிணறுகள், குறைவான ஆழத்திலேயே போடப்படுகின்றன. இதனால், அடுத்து வரும் ஆண்டுகளில் நிலத்தடி நீர் சற்று குறைந்தால் கூட, தண்ணீர் கிடைக்காதுl தரமற்ற முறையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படுகின்றன. அதிகளவில் மணலும், குறைந்த அளவில் சிமென்ட் கொண்டு குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளனl

ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும், ஊராட்சிக்கு ஏற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புக்கு 'டிபாசிட்' போக, எந்த ரசீதும் இன்றி பணம் வசூலிக்கப்பட்டுள்ளதுl சாலையோரம் ஆழமாக புதைக்க வேண்டிய குடிநீர் குழாய்கள், மேலோட்டமாக புதைக்கப்படுகின்றன. லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது, குழாய்கள் முற்றிலும் சேதமடையும் l ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், இந்த திட்டத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டுள்ளனர். கீழ் மட்டத்திலிருந்து, பெரிய அதிகாரிகள் வரை தகுதிக்கேற்ப 'கமிஷன்' கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.பணி முடியவில்லைஜல் ஜீவன் திட்ட பணி இன்னும் முடிவடையவில்லை.

குடிநீர் இணைப்பு வழங்கியதும், குடிநீர் தொட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் முடிந்த பின், குடிநீர் வழங்கப்படும். அனைத்து பணிகளும் முடிவடைந்து, குடிநீர் வரவில்லை என்றால் தெரிவியுங்கள்; கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், காஞ்சிபுரம்தொட்டி கட்ட தாமதம்படப்பை பெரியார் நகரில் 1,500 வீடுகள் உள்ளன. இங்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க கொடுக்கப்பட்ட 'பைப் லைன்' தரமற்ற முறையில் உள்ளது.

பல இடங்களில் குழாய்கள் உடைந்துள்ளன. ஆழ்துளை கிணறு அமைத்து பல மாதமாகியும், இதுவரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவில்லை.ஜே.சீனிவாசன்பெரியார் நகர், படப்பைகுடிநீர் வரவில்லைநான்கு மாதங்களுக்கு முன், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்த குழாயில் தண்ணீர் திறந்து மூடும் பகுதியை, இதுவரை பொருத்தவில்லை. ஒரு நாள்கூட குடிநீர் வரவில்லை.பி.ரேவதிபெரியார் நகர், படப்பைஒதுக்கப்பட்ட நிதி ரூ.185 கோடி274 ஊராட்சிகள் குக்கிராமங்கள் 1,354223 மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள்ஆழ்துளை கிணறுகள் 45850 திறந்தவெளி கிணறுகள்மொத்த இணைப்பு 1,16,7738,97,775 மீட்டர் பதிக்கப்படும் குழாய் அளவு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X