பொது செய்தி

தமிழ்நாடு

பார்வையற்றவர்களுக்கான 'ஸ்மார்ட் விஷன்' கண்ணாடி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மெட்ராஸ் ஈஸ்ட் ரோட்டரி கிளப் இணைந்து பார்வையற்றவர்களுக்கு 'ஸ்மார்ட் விஷன்' கண்ணாடி வழங்கும் விழாவை நடத்தின.டாக்டர் விஜயலட்சுமி வரவேற்றார். 'ஸ்மார்ட் விஷன்' கண்ணாடியின் சிறப்புகள் குறித்து குறைபார்வை மறுவாழ்வுக்கான நிபுணர் ப்ளோரா கூறியதாவது: முன்புறம் கேமரா மற்றும் ப்ளாஷ் லைட் இணைக்கப்பட்ட ஒரு கண்ணாடி தான் 'ஸ்மார்ட்

மதுரை : மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மெட்ராஸ் ஈஸ்ட் ரோட்டரி கிளப் இணைந்து பார்வையற்றவர்களுக்கு 'ஸ்மார்ட் விஷன்' கண்ணாடி வழங்கும் விழாவை நடத்தின.

டாக்டர் விஜயலட்சுமி வரவேற்றார். 'ஸ்மார்ட் விஷன்' கண்ணாடியின் சிறப்புகள் குறித்து குறைபார்வை மறுவாழ்வுக்கான நிபுணர் ப்ளோரா கூறியதாவது: முன்புறம் கேமரா மற்றும் ப்ளாஷ் லைட் இணைக்கப்பட்ட ஒரு கண்ணாடி தான் 'ஸ்மார்ட் விஷன்'. மனித உருவங்கள் உட்பட சுற்றுப்புறத்தில் உள்ளவற்றை பார்வையற்றவர்களுக்கு உணர்த்த இது பயன்படுகிறது. 2 மீ தூரம் வரை உள்ள பொருட்கள், உருவங்களை எந்த வெளிச்ச நிலையிலும் இக்கண்ணாடி உணர்த்தும்.

முகங்களில் தோன்றும் வேறுபாடுகளை அறியும் வசதியும் ஏற்கனவே பார்த்த மனிதர்களின் உருவங்களை சேமித்து வைக்கும் வசதியும் இதில் உள்ளது. 73 மொழிகளில் அச்சிடப்பட்ட கையால் எழுதப்பட்ட பக்கங்களை இந்த சாதனங்கள் படித்து காட்டும் என்றார்.கிளப் உறுப்பினர் ரகுராம் ராமகிருஷ்ணன், சுதா ரகுராம் கண்ணாடிகளை வழங்கினர்.

பத்து மாதங்களில் மேலும் 300 பேருக்கு 'ஸ்மார்ட் விஷன்' கண்ணாடி வழங்கப்படும் என கிளப் நிர்வாகி ராதிகா கூறினார். அரவிந்த் கண் காப்பு அமைப்பின் கவுரவ தலைவர் நம்பெருமாள்சாமி, நிர்வாக இயக்குனர் துளசிராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X