குலசேகரன்கோட்டை கண்மாய் ஓடைகள் ஆக்கிரமிப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே குடிமராமத்து பணிகள் முழுமையாக நடக்காத குலசேகரன்கோட்டை பெருமாள் கண்மாய் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.பெருமாள் மலை அடிவாரத்தில் 55 ஏக்கரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெருமாள் கண்மாய் உள்ளது. சிறுமலையிலிருந்து 8 கி.மீ., பயணித்து வரும் 2 நீர்வரத்து ஓடைகள் உள்ளன. குடிமராமத்து திட்டத்தில் ரூ.36.08 லட்சம் ஒதுக்கப்பட்டது. கண்மாய்,

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே குடிமராமத்து பணிகள் முழுமையாக நடக்காத குலசேகரன்கோட்டை பெருமாள் கண்மாய் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

பெருமாள் மலை அடிவாரத்தில் 55 ஏக்கரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெருமாள் கண்மாய் உள்ளது. சிறுமலையிலிருந்து 8 கி.மீ., பயணித்து வரும் 2 நீர்வரத்து ஓடைகள் உள்ளன. குடிமராமத்து திட்டத்தில் ரூ.36.08 லட்சம் ஒதுக்கப்பட்டது. கண்மாய், நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலையோர தடுப்பு சுவர்கள் பராமரிக்கப்படாததால் இடிந்து விழுகின்றன.

குட்டிகரடு பகுதிவாசிகள் கண்மாயில் குப்பைகளை கொட்டுகின்றனர். பெயரளவில் குடிமராமத்து பணி நடந்ததாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.விவசாயி மூர்த்தி: வெளிநபர்களை வைத்து பாசனதாரர்கள் சங்கம் அமைத்தனர். பணிகள் குறித்து சங்க உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் பதில் தரவில்லை.

ரூ.5 லட்சத்திற்கான பணிகள் மட்டுமே நடந்துள்ளது. முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்லையா: பணிகள் முழுமையாக முடிந்து 3 ஆண்டுகளாகிறது. 50 மீ., சுவர் கட்டப்பட்டது. அடுத்த நிதியில் சேதமடைந்த சுவர் கட்டப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X